31) சா – என்னும் வேர்ச்சொல்லின் வினைமுற்றை தேர்ந்தெடுக்க
a) செத்து
b) செத்தான்
c) செத்தவன்
d) சாதல்
32) ‘பயில்’ – என்னும் வேர்ச்சொால்லின் வினைமுற்றை காண்க
a) பயின்ற
b) பயின்று
c) பயிலல்
d) பயின்றான்
33) ‘துற’ என்னும் வேர்ச்சொல்லின் தொழிற்பெயர் எழுதுக
a) துறப்ப
b) துறந்து
c) துறத்தல்
d) துறந்தான்
34) ‘செல்’ என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தை தேர்க:
a) சென்ற
b) சென்று
c) சென்றவன்
d) சென்றான்
35) ‘கற்றவன்’ – இச்சொல்லின் வேர்ச்சொால்லை காண்க
a) கற்க
b) கற்று
c) கல்
d) கள்
36) ‘கற்கின்றனர்’ என்னும் நிகழ்கால வினைமுற்றின வேர்ச்சொல்
a) கற்க
b) கல்வி
c) கற்று
d) கல்
37) வேர்ச் சொல்லிலிருந்து வினையாலணையும் பெயரை உருவாக்கல் – கொடு
a) கொடுத்தல்
b) கொடுத்த
c) கொடுத்து
d) கொடுத்தவன்
38) “நட” என்பதன் வினைமுற்று
a) நடத்திய
b) நடத்து
c) நடத்தல்
d) நடந்தான்
39) “அயர்ந்தவன்” – இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க
a) அயர்க
b) அயர்
c) அயர்ந்து
d) அயர்ந்த
40) ‘பெறு’ என்ற வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடு :
a) பெற்றான்
b) பெறுவான்
c) பெறுகிறான்
d) பெறுபவன்