1) பெயர்ச்சொல்லின் வகை அறிக – “கேண்மை”
a) குணப்பெயர்
b) இடப்பெயர்
c) காலப்பெயர்
d) சினைப்பெயர்
2) பெயர்ச்சொல்லின் வகையறிதல் – “கரியன்” – என்ற பெயர்சொல்லின் வகை அறிக
a) சினைப் பெயர்
b) பொருட்பெயர்
c) பண்புப்பெயர்
d) தொழிற் பெயர்
3) பெயர்ச் சொல்லின் வகையறிதல்:
ஆதிரையான் என்ற பெயர்ச்சொல்லின் வகையறிக
a) பண்புப்பெயர்
b) தொழிற் பெயர்
c) காலப்பெயர்
d) குணப்பெயர்
4) பெயர்ச்சொல்லின் வகை அறிக – நன்மை
a) பொருட்பெயர்
b) சினைப்பெயர்
c) பண்புப்பெயர்
d) தொழிற்பெயர்
5) சினைப்பெயரைத் தேர்ந்து எழுதுக
a) ஊரன்
b) மூக்கன்
c) வறியன்
d) கடையன்
6) உரிச்சொற்றொடர் அல்லாததை எடுத்து எழுதுக
a) சாலப்பசி
b) விரிச்சுடர்
c) தவக்கோலம்
d) கடிமகள்
7) பொருட்பெயரால் வரும் பெயர்களை பொருத்துக
A) தமர், நமர் – 1) எண்ணால் வரும்பெயர்
B) இருவர், மூவர் – 2) முதல் என்பதால் வரும் பெயர்
C) அவையத்தார் – 3) கிளைப் பெயர்
D) முடியர் பொருளர் – 4) குழூஉப் பெயர்
a) A-1, B-2, C-3, D-4
b) A-3, B-1, C-4, D-2
c) A-4, B-2, C-1, D-3
d) A-1, B-3, C-2, D-4
8) பெயர்ச் சொல்லின் வகை அறிதல் சினை பெயரைக் குறிக்கும் சொற்கள் யாவை?
a) கேட்டல், படித்தல்
b) காலை, மாலை
c) பழம், கண்
d) அறிவழகன், பொன்
9) ‘அல்சசெறிந்தன்ன’ இதில் ‘அல்’ என்ற பெயர்ச் சொல்லின் வகை அறிக
a) தொழிற் பெயர்
b) காலப்பெயர்
c) சினைப் பெயர்
d) பொருட்பெயர்
10) பெயர்ச் சொல்லின் வகையறிதல் – தென்னைமரம்
a) இடுகுறி சிறப்புப் பெயர்
b) காரணச் சிறப்புப் பெயர்
c) இடுகுறிப் பொதுப்பெயர்
d) இடுகுறிப் காரணப்பெயர்