கம்பராமாயணம், இராவண காவியம் (PQ)

1) கம்பர் பிறந்த ஊர் ———— ஆகும்?

a) திருக்கடையூர்
b) திருவாரூர்
c) திருவழுந்தூர்
d) திருவெண்காடு

2) யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல், வள்ளுவர் போல், இளங்கோவைப் போல், பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை என்று கம்பரைப் புகழ்ந்து பாடியவர் யார்?

a) பாரதிதாசன்
b) பெருஞ்சித்திரனார்
c) பாரதியார்
d) கவிமணி தேசிய வினாயகம் பிள்ளை

3) வண்மையில்லை என்ற கம்பனின் பாடலால் அறியப்படுவது ————

a) அல்வழி நல்வழி அறிதல்
b) இயற்கைக் காட்சிகளை மனிதர்களோடு ஒப்பிடல்
c) ஒன்றின் இருப்பால் இன்னொன்று அடையாளப்படுகிறது என்பதை
d) பலவற்றின் இருப்பால் சிலவற்றைக் காண இயலாமல் போவதை

4) நின்னொடும் எழுவர் ஆனோம் என்று யார் யாரிடம் கூறினார்?

a) இராமன் குகனிடம்
b) இராமன் வீடணனிடம்
c) இராமன் சுக்ரீவனிடம்
d) இலக்குவன் குகனிடம்

5) கீழ்க்காண்பனவற்றுள் கொடி வகையைச் சேர்ந்தது எது?

a) குருக்கத்தி
b) செண்பகம்
c) கொன்றை
d) கமுகு

6) குகனின் தலைநகரம் எது?

a) நாட்டரசன்கோட்டை
b) சிருங்கிபேரம்
c) திருவரங்கம்
d) மிதிலை

7) இனி, நாம் ஓர் ஐவர்கள் உளர் ஆனோம் என்று யார் யாரிடம் கூறினார்?

a) இராமன் குகனிடம்
b) இலக்குவன் குகனிடம்
c) குகன் பரதனிடம்
d) பரதன் குகனிடம்

8) வேத நன்னூல் உய்த்துள காலமெல்லாம் புகழோடும் ஓங்கி நிற்பான் என்று போற்றப்படுபவர் யார்?

a) ராமன்
b) ராவணன்
c) அனுமன்
d) சுக்ரீவன்

9) அன்னவன் உரை கேளா அமலனும் உரை நேர்வான் பாடல் வரியில் அன்னவன் என்னும் சொல் உணர்த்தும் பொருள் யாது?

a) இராமன்
b) குகன்
c) வீடணன்
d) சுக்ரீவன்

10) ஆதிகவி என்று அழைக்கப்பட்டவர் யார்?

a) வால்மீகி
b) வீரமாமுனிவர்
c) சேக்கிழார்
d) மதுரகவி பாஸ்கரதாஸ்

TNPSC Master