1) உடம்பிடை தோன்றிற்றொன்றை அறுத்ததன் உதிரம் – ஊற்றி அடல் உறச்சுட்டு வேஹொர் மருந்தினால் துயரம் தீர்வர் – இத்தொடரைக் கூறியவர்
a) இளங்கோவடிகள்
b) சீத்தலைச் சாத்தனார்
c) கம்பர்
d) வால்மீகி
2) கம்பர் பிறந்த ஊர்
a) தேரழுந்தூர்
b) திருவாதவூர்
c) திருநாவலூர்
d) திருக்காவலூர்
3) கீழுள்ள நூற்பட்டியலில் கம்பர் எழுதிடாத நூலின் பெயர் என்ன?
a) சடகோபர் அந்தாதி
b) ஏரெழுபது
c) திணைமொழி ஐம்பது
d) சிலையெழுபது
4) சரியான விடையைத் தேர்வு செய்க
“ஆயிடை அணங்கின் கற்பும் ஐய நின்னருளும் செய்ய இவ்வரிகளில் சீதையை அழியாமல் காப்பாற்றியவை எவை?
a) அன்பும் பண்பும்
b) அறிவும் ஆற்றலும்
c) அறனும் மறனும்
d) கற்பும் அருளும்
5) பொருத்தமான விடையைக் கண்டறி
“தமிழுக்குக் கதி” போற்றப்படும் நூல்கள்
a) பாட்டும் தொகையும்
b) சிலம்பும் மேகலையும்
c) இராமாயணமும் குறளும்
d) பாரதமும் இராமாயணமும்
6) சரியான விடையைத்தேர்வு செய்க
கம்ப நாடகத்தின் யாப்பு வண்ணங்களின் எண்ணிக்கை
a) 100
b) 8
c) 96
d)108
7) கடன்பட்டார் நெஞ்சம் போல் ————
a) மகிழ்ச்சி
b) இன்பம்
c) கலக்கம்
d) துன்பமின்மை
8) இராமாயணத்தில் ‘சுந்தரன்’ என்னும் பெயரால் அழைக்கப்படுபவர்
a) இராமன்
b) அனுமன்
c) இலக்குவன்
d) வீடணன்
9) “கூவா முன்னம் இளையோன் குறுகி நீ
ஆவான் யார் என அன்பின் இறைஞ்சினான்” – இச்செய்யுளடிகளில் ‘இறைஞ்சினான்’ – யார்?
a) சுக்ரீவன்
b) குகன்
c) இலக்குவன்
d) அனுமன்
10) “கைவண்ணம் அங்குக் கண்டேன் ; கால்வண்ணம் இங்குக் கண்டேன்” – இப்பாடலடி இடம் பெற்ற நூல் எது?
a) சிலப்பதிகாரம்
b) மகாபாரதம்
c) நளவெண்பா
d) கம்பராமாயணம்