1) பாவை நூல்களில் காலத்தால் முற்பட்டதாகக் கருதப்படும் நூல் எது?
a) தைப்பாவை
b) திருப்பாவை
c) திருவெம்பாவை
d) காவியப்பாவை
2) “நான்மணிமாலை” – என்ற சொற்றொடர் குறிப்பது
a) முத்து, வைரம், வைடூரியம், மாணிக்கம்
b) முத்து, பவளம், மரகதம், மாணிக்கம்
c) முத்து, மரகதம், செம்பு, மாணிக்கம்
d) முத்து, பவளம், வைரம், மாணிக்கம்
3) ‘மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து ஈனமில் கிருமி செருவினில் பிழைத்தும்’ என்ற உயிரியியல் தொழில்நுட்பத்தை அறிவுறுத்தும் நூல்
a) தேவாரம்
b) திருவாசகம்
c) திருக்கோவையார்
d) திருப்பள்ளியெழுச்சி
4) “அழுது அடியடைந்த அன்பர்” – என்னும் தொடர் யாரைக் குறிக்கிறது?
a) அருணகிரியார்
b) சம்பந்தர்
c) சுந்தரர்
d) மாணிக்கவாசகர்
5) விடைத்தேர்க : இலக்கியச் செய்திகளோடு அறிவியல் துறைப்பொருள்களையும் முதன் முதலாகச் சேர்த்து விளக்கம் தந்த நூல் எது?
a) அபிதான கோசம்
b) அபிதான சிந்தாமணி
c) விவேக சிந்தாமணி
d) சீவகசிந்தாமணி
6) சுந்தரர் இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட இடம் எது?
a) திருச்செங்குன்றம்
b) திருவெண்ணெய் நல்லூர்
c) திருச்செந்தூர்
d) திருவாரூர்
7) ‘தென்னவன் பிரம்மராயன்’ என்ற விருதிற்கு உரியவர்
a) திருநாவுக்கரசர்
b) சுந்தரர்
c) மாணிக்கவாசகர்
d) திருஞானசம்பந்தர்
8) “தேன்கலந்து பால்கலந்து செழுங்கனி தீஞ்சுவை கலந்து என் ஊன் கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே” இப்பாடலடியில் ஊன் – இணையான தமிழ்ச்சொல் எழுது
a) உணவு
b) பிணவு
c) நிணம்
d) குணம்
9) வாகீசர் என்றழைக்கப்படும் சான்றோர் யார்?
a) திருநாவுக்கரசர்
b) திருஞானசம்பந்தர்
c) சுந்தரர்
d) மாணிக்கவாசகர்
10) உரிய விடையைத் தேர்க :
அகராதி என்னும் சொல் முதன்முதலாக இடம் பெற்றுள்ள நூல்
a) திருமந்திரம்
b) சதுரகராதி
c) தமிழ் அகராதி
d) தமிழ்-தமிழ் அகர முதலி