1) சரியான எண்ணடையைத் தெரிவு செய்க.
ஒன்று + இடம்
a) ஓரிடம்
b) ஒரு இடம்
c) ஒன்றே இடம்
d) ஒன்று இடம்
2) பால் + ஊறும் – சேர்த்தெழுதுக.
a) பால்ஊறும்
b) பால்லூறும்
c) பாலூறும்
d) பாஊறும்
3) மாசற – பிரித்தெழுதுக.
a) மாச + அற
b) மாச + உற
c) மாசு + அற
d) மாசு + உற
4) சரியான இணையைக் கண்டறிக
a) மணி + அடி – மணிஅடி
b) மரம் + கிளை – மரம்கிளை
c) ஆல் + இலை – ஆலிலை
d) தே + ஆரம் – தேஆரம்
5) சேர்த்தெழுதுக – ஓடை + ஆட
a) ஓடைஆட
b) ஓடையாட
c) ஓடையோட
d) ஓடைவாட
6) சேர்த்தெழுதுக – வாசல் + அலங்காரம்
a) வாசல் அலங்காரம்
b) வாசலங்காரம்
c) வாசலலங்காரம்
d) வாலங்காரம்
7) பிரித்தெழுதுக
தம்முயிர்
a) தம் + உயிர்
b) தமது + உயிர்
c) தம்மு + உயிர்
d) தன் + உயிர்
8) சேர்த்து எழுதுக
பருத்தி + எல்லாம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
a) பருத்திஎல்லாம்
b) பருத்தியெல்லாம்
c) பருத்தெல்லாம்
d) பருத்திதெல்லாம்
9) வட்டு + ஆடினான் என்பதைச் சேர்த்தெழுதுக.
a) வட்டு ஆடினான்
b) வட்டினான்
c) வட்டாடினான்
d) வட்டுடாடினான்
10) “இன்மொழி” – பிரித்து எழுதுக.
a) இன் + மொழி
b) இ + மொழி
c) இன்ன + மொழி
d) இனிமை + மொழி