விடைக்கேற்ற வினாவைத்‌ தேர்ந்தெடுத்தல்‌ (PYQ)

1) விடைக்கேற்ற வினாவைத்‌ தேர்ந்‌தெடுத்தல்‌
மாணவரிடம்‌, “இந்தக்‌ கவிதையின்‌ பொருள்‌ யாது?” என்று ஆசிரியர்‌ வினவும்‌ வினா?

a) அறிவினா
b) ஐயவினா
c) கொடைவினா
d) ஏவல்வினா

2) விடைக்கேற்ற வினாவைத்‌ தேர்ந்தெடுக்க
பாரதியார்‌ சிந்துக்குத்‌ தந்தை என அழைக்கப்படுகிறார்‌.

a) பாரதியார்‌ சிந்துக்குத்‌ தந்தை என அழைக்கப்படுகிறாரா?
b) சிந்துக்குத்‌ தந்தை என அழைக்கப்படுபவர்‌ யார்‌?
c) பாரதியார்‌ சிந்துக்குத்‌ தந்தை என அழைக்கப்படுவதேன்‌?
d) பாரதியார்‌ ஏன்‌ அவ்வாறு அழைக்கப்படுகிறார்‌?

3) விடைக்கேற்ற வினாவைத்‌ தேர்ந்தெடுத்தல்‌
பானையின்‌ வெற்றிடமே நமக்குப்‌ பயன்படுகிறது?

a) பானையின்‌ எப்பகுதி நமக்குப்‌ பயன்படுகிறது?
b) பானை எப்படி நமக்குப்‌ பயன்படுகிறது?
c) பானை எதனால்‌ நமக்குப்‌ பயன்படுகிறது?
d) பானை எங்கு நமக்குப்‌ பயன்படுகிறது.

4) விடைக்கேற்ற வினாவைத்‌ தேர்ந்தெடுத்து எழுதுதல்‌
“கல்வியில்‌ பெரியவர்‌ கம்பர்‌”

a) கல்வியில்‌ புகழ்‌ பெற்றவர்‌ யார்‌?
b) கல்வியில்‌ சிறந்தவர்‌ யார்‌ ?
c) கவிதையில்‌ பெரியவர்‌ யார்‌?
d) கல்வியில்‌ பெரியவர்‌ யார்‌?

5) விடைக்கேற்ற வினாவைத்‌ தேர்ந்தெடுத்தல்‌
விருதுநகரின்‌ முந்தைய பெயர்‌ விருதுப்பட்டி

a) விருதுநகரின்‌ முந்தைய பெயர்‌ என்ன?
b) விருதுநகரின்‌ முந்தைய பெயர்‌ விருதுப்பட்டியா?
c) விருதுநகர்‌ தற்போது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
d) விருதுநகரும்‌ விருதுப்பட்டியும்‌ ஒன்றா?

6) விடைக்கேற்ற வினாவை தேர்ந்தெடுக்க:
“ஸ்டீபன்‌ ஹாக்கிங்‌ தற்காலத்தின்‌ ஐன்ஸ்டைன்‌ எனப்‌ புகழப்படுகிறார்‌.”

a) ஸ்டீபன்‌ ஹாக்கிங்‌ என்பவர்‌ யார்‌?
b) ஸ்டீபன்‌ ஹாக்கிங்‌ ஏன்‌ அவ்வாறு அழைக்கப்படுகிறார்‌?
c) ஸ்டீபன்‌ ஹாக்கிங்‌ எவ்வாறு புகழப்படுகிறார்‌?
d) ஸ்டீபன்‌ ஹாக்கிங்‌ யாரோடு ஒப்பிடப்படுகிறார்‌?

7) கீழ்க்காணும்‌ தொடருக்கான வினாவில்‌ தவறானதைக்‌ தேர்ந்தெடு:
தொல்காப்பியத்தைப்‌ படித்துப்‌ படித்து என்‌ தொல்லையெல்லாம்‌ மறந்தேன்‌.

a) எதைப்‌ படித்தால்‌ உன்‌ தொல்லை மறக்கும்‌?
b) உன்‌ தொல்லை மறக்க எதைப்‌ படிக்க வேண்டும்‌?
c) தொல்காப்பியத்தைப்‌ படித்தால்‌ எந்தெந்த தொல்லை மறையும்‌?
d) தொல்காப்பியம்‌ படிப்பதன்‌ பயன்‌ என்ன?

8) விடைக்கேற்ற வினாவைத்‌ தேர்ந்தெடு:
கியூரி அம்மையார்‌ போலந்து நாட்டைச்‌ சேர்ந்தவர்‌.

a) கியூரி அம்மையார்‌ பிறந்த ஊர்‌ எது?
b) கியூரி அம்மையார்‌ எந்த நாட்டைச்‌ சேர்ந்தவர்‌?
c) கியூரி அம்மையார்‌ எங்கு வாழ்ந்தார்‌?
d) கியூரி அம்மையார்‌ எந்த மாநிலத்தைச்‌ சேர்ந்தவர்‌?

9) விடைக்கேற்ற வினாவைத்‌ தேர்ந்தெடு:
திருக்குறள்‌ உலகப்‌ பொதுமறை என்று போற்றப்படுகிறது.

a) உலகப்‌பொதுமறை என்று போற்றப்படுவது திருக்குறளா?
b) எந்த நூல்‌ உலகப்‌ பொதுமறை என்று போற்றப்படுகிறது?
c) போற்றப்படும்‌ உலகப்‌ பொதுமறை நூல்‌ எது?
d) நூல்‌ போற்றப்படுகிறது உலகப்‌ பொதுமறை என்று?

10) சாலைகளின்‌ இடப்பக்கம்‌ வண்டிகள்‌ செல்வதே சாலை விதிகளில்‌ முதன்மையான விதி – விடைக்கேற்ற வினாவைத்‌ தேர்ந்தெடுக்க :

a) சாலை விதிகளில்‌ முதன்மையான விதி எது ?
b) சாலை விதிகள்‌ யாவை ?
c) சாலை விதி என்றால்‌ என்ன ?
d) சாலைகளின்‌ இடப்பக்க விதி யாது ?