எவ்வகை வாக்கியம்‌ எனக்‌ கண்டெழுதுதல்‌ – தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டு வினை வாக்கியங்களைக்‌ கண்டுடெழுதுதல்‌ (PYQ)

1) வாக்கிய அமைப்பினைக் கண்டறிக
பந்து உருண்டது

a) தன்வினை
b) பிறவினை
c) செய்வினை
d) செயப்பாட்டுவினை

2) பிறவினைச்‌ சொற்றொடரைக்‌ கண்டறிக.

a) பூங்குழலி திருக்குறள்‌ கற்றிலள்‌
b) பூங்குழலி திருக்குறள்‌ கற்றாள்‌
c) பூங்குழலி திருக்குறள்‌ கற்பித்தாள்‌
d) பூங்குழலி திருக்குறள்‌ கற்பித்தாளா?

3) வாக்கிய அமைப்பினைக்‌ கண்டறிக :
“நான்‌ திடலில்‌ ஓடினேன்‌”

a) தன்வினை
b) செய்வினை
c) பிறவினை
d) செயப்பாட்டு வினை

4) சரியான வினை மரபை எடுத்தெழுதுக

a) தண்ணீர்‌ பருகினான்‌
b) தண்ணீர்‌ அருந்தினான்‌
c) தண்ணீர்‌ உண்டான்‌
d) தண்ணீர்‌ குடித்தான்‌

5) மாணவர்கள்‌ நன்றாகப்‌ படித்தனர்‌ – எவ்வகை வாக்கியம்‌

a) பிறவினை
b) தன்வினை
c) செயப்பாட்டு வினை
d) உணர்ச்சி தொடர்‌

6) தந்தை மகனை நன்றாகப்‌ படிக்க வைத்தார்‌ – எவ்வகை வினை என கண்டறிக.

a) தன்வினை
b) பிறவினை
c) செய்வினை
d) செயப்பாட்டு வினை

7) எவ்வகை வாக்கியம்‌ எனக்‌ கண்டெழுதுதல்‌
அப்துல்‌ நேற்று வந்தான்‌.

a) பிற வினைத்தொடர்‌
b) உணர்ச்சித்‌ தொடர்‌
c) தன்வினைத்‌ தொடர்‌
d) செய்வினைத்‌ தொடர்‌

8) செய்வினையைத்‌ தேர்ந்தெடு

a) கண்ணன்‌ நேற்று வந்தான்‌
b) இது நாற்காலி
c) குமரன்‌ மழையில்‌ நனைந்தான்‌
d) கவிதா உரை படித்தாள்‌

9) செயப்பாட்டுவினைத்‌ தொடரைக்‌ கண்டறிக.

a) தோசை வைத்தார்‌
b) தோசை வைத்தான்‌
c) தோசை வைக்கப்பட்டது
d) தோசை வைத்தல்‌

10) எவ்வகை வாக்கியம்‌ எனக்‌ கண்டெழுதுதல்‌ :
“கமலா சிலப்பதிகாரம்‌ கற்றாள்‌”

a) முற்றுவினை வாக்கியம்‌
b) பிறவினை வாக்கியம்‌
c) செய்வினை வாக்கியம்‌
d) செயப்பாட்டுவினை வாக்கியம்‌

TNPSC Master