பிறமொழிச்‌ சொற்களுக்கு இணையான தமிழ்ச்‌ சொற்களைக்‌ கண்டறிதல்‌ (எ.கா.) கோல்டு பிஸ்கட்‌ – தங்கக்‌ கட்டி (PYQ)

1) பிறமொழிச்‌ சொற்களை நீக்குக.
யூனிஃபார்ம்‌ போட்டு ஸ்கூலுக்குப்‌ போனாள்‌

a) சட்டை போட்டு வகுப்புக்குப்‌ போனாள்‌
b) சீருடை அணிந்து பள்ளிக்குப்‌ போனாள்‌
c) ஆடை அணிந்து வகுப்புக்குப்‌ போனாள்‌
d) அணிகலன்‌ அணிந்து பள்ளிக்குப்‌ போனாள்‌

2) ‘ஆன்சர்‌’ – இணையான தமிழ்ச்சொல்‌ தருக.

a) மிகச்சரியான விடை
b) நேர் விடை
c) விடை
d) சரியான விடை

3) சரியான இணையைத் தோந்தெடுக்க.

a) கிராமம்‌ – ஊர்‌
b) ஆஸ்பிடல்‌ – மருந்தகம்‌
c) குசினி – சமையலறை
d) நிபுணர்‌ – ஓவியர்‌

4) இணையான தமிழ்ச்‌ சொல்லைக்‌ கண்டறிக
‘ஸ்மார்ட்‌ கார்டு’

a) திறனட்டை
b) குடும்ப அட்டை
c) ரேசன்‌ அட்டை
d) ஆதார்‌ அட்டை

5) சரியான தமிழ்ச்சொல்லைத்‌ தேர்க
‘விவாஹம்‌’

a) விழா
b) திருமணம்‌
c) பண்டிகை
d) காதுகுத்து

6) பிறமொழிச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்‌ சொல்லைக்‌ கண்டறிக
‘சர்க்கார்‌’

a) அரசாங்கம்‌
b) ஜனநாயகம்‌
c) அரவை
d) ஆஸ்பத்திரி

7) பிறமொழிச்‌ சொல்லுக்கு இணையான தமிழ்ச்‌ சொல்‌லைக் கண்டறிக
‘லைட்‌ ஹவுஸ்‌’

a) கலங்கரை விளக்கம்‌
b) படகு வீடு
c) மர வீடு
d) கப்பல்‌ விளக்கு

8) சரியான இணையைத்‌ தெரிவு செய்க

a) உத்தரவு – பணி
b) கஜானா – வருவாய்‌
c) பாக்கி – இழப்பு
d) அலங்காரம்‌ – ஒப்பனை

9) பிறமொழிச்‌ சொல்லுக்கு இணையான தமிழ்ச்‌ சொல்‌.
“அலர்ஜி” என்பதன் தமிழ்ச்‌ சொல்‌

a) உண்ணாமை
b) ஒவ்வாமை
c) படை, சொரி
d) சிரங்கு

10) பிறமொழிச்‌ சொற்களுக்கு இணையான தமிழ்ச்‌ சொற்களைக்‌ கண்டறிதல்‌.
வாடகை

a) வருமானம்‌
b) குடிக்கூலி
c) செலவு
d) சிக்கனம்‌