1) “வனப்பு” – பொருள் கண்டறிக.
a) அழகு
b) மகிழ்வு
c) சாந்தம்
d) காந்தம்
2) பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க.
கீழ் கொடுக்கப்பட்டுள்ளவற்றில் நுனியில் சுருங்கிய காய் எது?
a) அழுகல்
b) அளியல்
c) சூம்பல்
d) தேரைக்காய்
3) “வருக்கை” – என்பது
a) தேங்காய்
b) பாக்கு மரம்
c) பலாப்பழம்
d) வாழைப்பழம்
4) இராமன் குகனிடம், “விடு நனி கடிது” என்றான்.
இத்தொடரில் கோடிட்ட சொல்லுக்கான பொருளைத் தெரிக.
a) துடிப்பாக
b) உயர்வாக
c) சிறப்பாக
d) விரைவாக
5) “மலை” எனும் பொருள் தரும் சொற்களைத் தேர்க
a) பொருப்பு, வெற்பு, அசலம்
b) வெற்பு, வேங்கடம், அசலம்
c) மறை, வேதம், துறை
d) குன்றம், கிரி, மறை
6) நீண்டதொரு காலப்பகுதி எனும் பொருளைத் தரும் சொல்
a) ஆழி
b) ஊழி
c) வாழி
d) பாழி
7) பொருத்தமான பொருளைத்தெரிவு செய்தல் :
A) சிறுபஞ்சமூலம் – 1) காப்பிய இலக்கியம்
B) குடும்ப விளக்கு – 2) சங்க இலக்கியம்
C) சீவக சிந்தாமணி – 3) அற இலக்கியம்
D) குறுந்தொகை – 4) தற்கால இலக்கியம்
a) 3, 4, 1, 2
b) 2, 3, 1, 4
c) 3, 1, 4, 2
d) 4, 1, 2, 3
8) பொருத்தமான பொருளைத் தெரிவு செய்தல்: (சொல் – பொருள்)
A) மேதி – 1) குளக்கரை
B) தரளம் – 2) எருமைக்கடா
C) பகடு – 3) எருமை
D) கோடு – 4) முத்து
a) 1, 3, 2, 4
b) 3, 4, 2, 1
c) 4, 1, 3, 2
d) 2, 4, 1, 3
9) “வெய்யோன்” என்பதன் தவறான பொருளைத் தேர்ந்தெடுக்க
a) பகலவன்
b) ஆதவன்
c) ஞாயிறு
d) நிலவு
10) பொருத்தமான பொருளைத் தெரிவு செய்தல் : நிலையான செல்வம்
a) தங்கம்
b) பணம்
c) ஊக்கம்
d) ஏக்கம்