சொற்களின்‌ கூட்டுப்‌ பெயர்கள்‌ (எ.கா.) புல்‌ -புற்கள்‌ (PYQ)

1) சரியான இணைத்‌ தொடரை தேர்வு செய்க.

a) கல்‌ – குவியல்‌, பழம்‌ – குலை, புல்‌ – கட்டு, ஆடு – மந்தை
b) கல்‌ – கட்டு, பழம்‌ – மந்தை, புல்‌ – குவியல்‌, ஆடு – குவியல்‌
c) பழம்‌ – மந்தை, புல்‌ – மந்தை, ஆடு – கட்டு, கல்‌ – குலை
d) கல்‌ – மந்தை, பழம்‌ – குவியல்‌, புல்‌ – குலை, ஆடு – கட்டு

2) கூட்டுப்‌ பெயரைக்‌ குறிப்பிடு
மா

a) மாங்கொல்லை
b) மாமரங்கள்‌
c) மாந்தோப்பு
d) மாந்தோட்டம்‌

3) கூட்டப்‌ பெயரைக்‌ குறிப்பிடு
கல்‌

a) கல்‌ குட்டை
b) கற்‌ குவியல்‌
c) கல்‌ குவாரி
d) கல்‌ கோபுரம்‌

4) சொற்களின்‌ கூட்டப்‌பெயர்கள்‌ கீழ்க்காணும்‌ சொல்லின்‌ கூட்டுப்பெயர்‌ யாது?
ஆடு

a) ஆட்டுக்கூட்டம்‌
b) ஆட்டு மந்தை
c) ஆட்டுப்படை
d) ஆட்டுநிரை

5) பழம்‌ – கூட்டுப்பெயர்‌

a) பழசீப்பு
b) பழக்கச்சை
c) பழக்குலை
d) பழக்குவியல்‌

6) கூட்டப்‌ பெயரைக்‌ குறிப்பிடு.
மக்கள்‌

a) மக்கள்‌ கூட்டம்‌
b) மக்கள்‌ தொகை
c) மக்கள்கள்‌
d) மனிதர்கள்‌

7) கூட்டப்‌ பெயரை எழுதுக.
திராட்சை

a) குலை
b) கொத்து
c) குவியல்‌
d) கூடை

8) கீழ்கண்டச்‌ சொல்லின்‌ கூட்டுப்பெயரினை எழுதுக
வாழைமரம்‌

a) வாழைத்‌ தோப்பு
b) வாழைக்கன்று
c) வாழைத்‌ தோட்டம்‌
d) வாழையிலை

9) பின்வருவனவற்றுள்‌ சரியான இணைகளைக்‌ குறிப்பிடுக
அ) புல்‌ – புற்கள்‌
ஆ) சொல்‌ – சொல்கள்‌
இ) பூ – பூக்கள்‌
ஈ) மாதம்‌ – மாதக்கள்‌

a) அ, ஆ
b) இ, ஈ
c) அ, இ
d) ஆ, ஈ

10) சொற்களின்‌ கூட்டுப்‌ பெயர்கள்‌ :
ஆடு – கூட்டுப்பெயர்‌

a) ஆட்டுக்கூட்டம்‌
b) ஆட்டுத்தொழுவம்‌
c) ஆட்டுமந்தை
d) ஆட்டுசந்தை