சரியான தொடரைத்‌ தேர்ந்தெடுத்தல்‌ (PYQ)

1) சரியான தொடரைக்‌ கண்டறிக.

a) நான்‌ ஊண்‌ உண்ணும்‌ வளக்கத்தை விட்டு விட்டேன்‌
b) நான்‌ ஊன்‌ உண்ணும்‌ வழக்கத்தை விட்டு விட்டேன்‌
c) நான்‌ ஊன்‌ உன்னும்‌ வழக்கத்தை விட்டு விட்டேன்‌
d) நான்‌ ஊன்‌ உண்ணும்‌ வளக்கத்தை விட்டு விட்டேன்‌

2) நண்பா படி! – என்ற விளித்தொடருக்கு இணையான தொடரினைத்‌ தேர்ந்தெடுக்க.

a) தேன்‌ குடி!
b) கண்ணா வா!
c) விரைவாக வா!
d) அங்கேபோ!

3) கீழ்க்கண்டவற்றை கலவைச்‌ சொற்றாடராக மாற்றுக.
‘அழைப்பு மணி ஒலித்தது. கயல்‌ கதவைத்‌ திறந்தாள்‌’

a) அழைப்பு மணி ஒலித்ததால்‌ கயல்‌ கதவைத்‌ திறந்தாள்‌
b) அழைப்பு மணி ஒலி கேட்டு கயல்‌ கதவைத்‌ திறந்தாள்‌
c) அழைப்பு மணி ஒலிக்க கயல்‌ கதவைத்‌ திறந்தாள்‌
d) அழைப்பு மணி ஒலியோடு கயல்‌ கதவைத்‌ திறந்தாள்‌

4) சரியான தொடரைத்‌ தேர்ந்தெடு
நான்‌ நன்றாக தேர்வு எழுதினேன்‌

a) உணர்ச்சித்‌ தொடர்‌
b) எதிர்மறை வினைத்தொடர்‌
c) உடன்பாட்டு வினைத்தொடர்‌
d) செயப்பாட்டு வினைத்தொடர்‌

5) சரியான தொடரைத்‌ தேர்ந்தெடு
“அறைக்குப்‌ புத்தகங்கள்‌ வருவித்தார்‌”

a) தன்‌ வினைத்தொடர்‌
b) உடன்பாட்டு வினைத்தொடர்‌
c) செய்கித்தொடர்‌
d) பிற வினைத்தொடர்

6) தென்னிந்தியானின்‌ அடையாளச்‌ சின்னமாகக்‌ காங்கேயம்‌ மாடுகள்‌ போற்றப்படுகின்றன. எவ்வகைத்‌ தொடர்‌ ?

a) வினாத்‌ தொடர்‌
b) கட்டளைத்‌ தொடர்‌
c) செய்தித்‌ தொடர்‌
d) உணர்ச்சித்‌ தொடர்‌

7) இடக்கரடக்கல்‌ தொடரைக்‌ கண்டறிக.

a) அவன்‌ ஆடு மேய்த்தான்‌
b) கால்‌ கழுவி வந்தான்‌
c) அவள்‌ பூவைப்‌ பறித்தாள்‌
d) ஆடையைத்‌ துவைத்தான்‌

8) சரியான தொடரைக்‌ கண்டறிக.

a) செடியில்‌ பூ பூத்திருந்தன
b) காடு செழிப்பாக இருந்தன
c) மாடுகள்‌ புற்களை மேயந்தது
d) மான்கள்‌ வேகமாக ஓடின

9) சரியான தொடரைத்‌ தேர்ந்தெடு
நான்‌ மழையில்‌ நனைந்தேன்‌

a) உணர்ச்சித்‌ தொடர்‌
b) உடன்பாட்டு வினைத்‌ தொடர்
c) பிறவினைத்‌ தொடர்‌
d) பெயர்ப்‌ பயனிலைத்‌ தொடர்‌

10) நான்‌ நாளை மதுரை செல்கிறேன்‌ – இது எவ்வகைத்‌ தொடர்‌?

a) வினாத்‌ தொடர்‌
b) செய்தித்‌ தொடர்‌
c) கலவைத்‌ தொடர்‌
d) கட்டளைத்‌ தொடர்‌