பிழை திருத்துதல்‌ (ஒரு-ஓர்‌) (PYQ)

1) பிழை திருத்துக.
சரியான இணையைத்‌ தேர்வு செய்க.

a) ஓர்‌ பகல்‌
b) ஒன்று பகல்‌
c) ஒரு பகல்‌
d) ஒன்பகல்‌

2) கீழ்காணும்‌ தொடர்களில்‌ ஒரு – ஓர்‌ சரியாக அமைந்த தொடர்‌ எது ?

a) ஒரு ஊர்‌
b) ஓர் ஊர்‌
c) ஓர்‌ பழைய ஊர்‌
d) ஒரு இனிய ஊர்‌

3) பிழையற்ற தொடரைத்‌ தேர்ந்தெடுக்க

a) மாலை நடக்கும்‌ ஓர்‌ பொதுக்கூட்டத்திற்கு ஓர்‌ அமைச்சர்‌ தலைமை தாங்குகிறார்‌
b) மாலை நடக்கும்‌ ஒரு பொதுக்கூட்டத்திற்கு ஒரு அமைச்சர்‌ தலைமை தாங்குகிறார்‌
c) மாலை நடக்கும்‌ ஒரு பொதுக்கூட்டத்திற்கு ஓர்‌ அமைச்சர்‌ தலைமை தாங்குகிறார்‌
d) மாலை நடக்கும்‌ ஓர்‌ பொதுக்கூட்டத்திற்கு ஒரு அமைச்சர்‌ தலைமை தாங்குகிறார்‌

4) பிழையற்றத்‌ தொடரைக்‌ கண்டறிக
ஒரு – ஓர்‌

a) ஒரு அழகிய சிற்றூரில்‌ ஓர்‌ குளம்‌ இருந்தது
b) ஓர்‌ அழகிய சிற்றூரில்‌ ஒரு குளம்‌ இருந்தது
c) ஒரு அழகிய சிற்றூரில்‌ ஒரு குளம்‌ இருந்தது
d) ஓர்‌ அழகிய சிற்றூரில்‌ ஓர்‌ குளம்‌ இருந்தது

5) பிழை திருத்துக – சரியான இணையைத்‌ தெரிவு செய்க.
ஒன்று + உலகம்‌

a) ஓர்‌ உலகம்‌
b) ஒரு உலகம்‌
c) ஒன்று உலகம்‌
d) மூன்றும்‌ சரி

6) பிழை திருத்துக – சரியான இணையைத்‌ தெரிவு செய்க
ஒன்று + மரம்‌

a) ஒரு மரம்‌
b) ஓர் மரம்‌
c) ஒன்று மரம்‌
d) மூன்றும்‌ சரி

7) கீழ்காணும்‌ தொடர்களில்‌ (ஒரு – ஓர்) சரியாக அமைந்த தொடர்‌ எது?

a) ஒரு அழகிய ஊஞ்சல்‌ ஆடுகிறது
b) ஓர்‌ ஊஞ்சல்‌ ஆடுகிறது
c) ஒரு ஊஞ்சல்‌ ஆடுகிறது
d) ஓர்‌ மர ஊஞ்சல்‌ ஆடுகிறது

8) ஒரு – ஓர் பயன்பாடு சரியாக உள்ள தொடரைத்‌ தேர்க.

a) ஓர்‌ அழகிய சிற்றூரில்‌ ஒரு குளம்‌ இருந்தது
b) ஒரு அழகிய சிற்றூரில்‌ ஓர்‌ குளம்‌ இருந்தது
c) ஓர்‌ அழகிய சிற்றூரில்‌ ஓர்‌ குளம்‌ இருந்தது
d) ஒரு அழகிய சிற்றூரில்‌ ஒரு குளம்‌ இருந்தது

9) பிழை திருத்துக (ஒரு – ஓர்)
பின்வருவனவற்றுள்‌ பிழையற்றத்‌ தொடரைத்‌ தேர்ந்தெடுக்க.

a) சென்னை ஒரு மாநகரம்‌
b) சென்னைக்கு ஓர்‌ மாணவன்‌ வந்தான்‌
c) வந்தாரை வாழ வைக்கும்‌ ஓர்‌ நகரம்‌ சென்னை
d) சென்னை தொழில்‌ நுட்பப்‌ பூங்காக்கள்‌ நிறைந்த ஓர்‌ நகரம்‌

10) பிழை திருத்துதல்‌ : (ஒரு – ஓர்)
(ஒரு – ஓர்‌ சரியாக அமைந்த தொடரைத்‌ தேர்ந்தெடுக்க)

a) ஒரு அணில்‌ மரத்தில்‌ ஏறின.
b) ஓர்‌ அணில்‌ மரத்தில்‌ ஏறின.
c) ஓர்‌ அணில்‌ மரத்தில்‌ ஏறியது.
d) ஒரு அணில்‌ மரத்தில்‌ ஏறியது.