ஒருமை – பன்மை பிழை (PYQ)

1) தொடரில்‌ உள்ள பிழையற்ற வாக்கியம்‌ எது?

a) பானையை உடைத்தது கண்ணன்‌ அல்ல
b) பானையை உடைத்தது கண்ணன்‌ அன்று
c) பானையை உடைத்தது கண்ணன்‌ அல்லன்‌
d) பானையை உடைத்தது கண்ணன்‌ அல்லேன்‌

2) ஒருமை, பன்மை பிழை நீக்கி எழுதுக.

a) பள்ளி மாணவர்கள்‌ அறிவியல்‌ சுற்றுலா செல்லத்‌ திட்டமிடுகிறார்கள்‌
b) பள்ளி மாணவர்கள்‌ அறிவியல்‌ சுற்றுலா செல்லத்‌ திட்டமிடுகிறான்‌
c) பள்ளி மாணவர்கள்‌ அறிவியல்‌ சுற்றுலா செல்லத்‌ திட்டமிடுகிறார்‌.
d) பள்ளி மாணவர்கள்‌ அறிவியல்‌ சுற்றுலா செல்லத்‌ திட்டமிடுகின்றது.

3) ஒருமை பன்மை பிழை நீக்குக.

a) இவை பழங்கள்‌ அன்று
b) இவைகள்‌ பழங்கள்‌ அன்று
c) இது பழங்கள்‌ அன்று
d) இது பழம்‌ அன்று

4) ஒருமை – பன்மை பிழையற்றச்‌ சொல்லைத்‌ தேர்க
கண்ணகியின்‌ சிலம்பு ————

a) இதுவல்ல
b) இதுவன்று
c) இவையன்று
d) இவையல்ல

5) ஒருமை பன்மை பிழை
கன்று ———— தலையை ஆட்டியது.

a) தான்‌
b) தாம்‌
c) தமது
d) தனது

6) ஒருமை – பன்மை பிழையற்றத்‌ தொடர்‌ எது?

a) என்‌ தங்கை பரிசு பெற்றான்‌
b) என்‌ தங்கை பரிசு பெற்றன
c) என்‌ தங்கை பரிசு பெற்றது
d) என்‌ தங்கை பரிசு பெற்றாள்‌

7) ஒருமை பன்மை பிழையற்ற தொடரைத் தெரிவு செய்க

a) இவை பூக்கள்‌ அன்று
b) இவை பூ அன்று
c) இவை பூக்கள் அல்ல
d) இவை பூ அல்ல

8) பன்மைச்‌ சொல்‌ (இவை பழங்கள்‌)

a) அன்று
b) அல்ல
c) எத்தனை
d) எவை

9) ஒருமை, பன்மை பிழையற்ற தொடர்‌ எது?

a) மேகங்கள்‌ சூழ்ந்து கொண்டன
b) மேகம்‌ சூழ்ந்து கொண்டன
c) மேகம்‌ சூழ்ந்து கொண்டனர்‌
d) மேகங்கள்‌ கூழ்ந்துள்ளது

10) ஒருமை, பன்மை பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடுக்க.

a) இது பழம்‌ அல்ல
b) இது பழம்‌ அன்று
c) இது பழங்கள்‌ அல்ல
d) இது பழங்கள்‌ அன்று

TNPSC Master