பத்தியிலிருந்து வினாவிற்கான சரியான விடையைத்‌ தேர்ந்தெடு (PYQ)

1) மக்கள்‌ வாழ்வில்‌ பிறந்தது முதலாக நடத்தப்படுகின்ற நீகழ்வுகளில்‌ விழா, தனக்கென்று ஒரு தனியிடம்‌ பெறுகிறது. மனித மாண்புகளை எடுத்துரைக்கும்‌ விழா. பண்பாட்டின்‌ வெளிப்பாடாகவம்‌ திகழ்கிறது. அவ்வகையில்‌ புகார்‌ நகரோடு அதிகம்‌ தொடர்புடையதாகத்‌ திகழ்ந்த இந்திரவிழா சிலப்பதிகாரத்திலும்‌ மணிமேகலையிலும்‌ விவரிக்கப்படுகிறது. இந்திர விழாவின்‌ போது தெருக்களில்‌ புதிய மணலைப்‌ பரப்பினர்‌. நிழல்தரும்‌ ஊர்மன்றங்களில்‌ நல்லன பற்றி சொற்பொழிவாற்றினர்‌. இவ்விழா இருபத்தெட்டு நாட்கள்‌ நடைபெற்றன.

i) மக்கள்‌ வாழ்வில்‌ பிறந்தது முதலாக நடத்தப்படும்‌ நிகழ்வுகளில்‌ தனியிடம்‌ பெறுவது எது?

a) விளையாட்டு
b) விழா
c) ஆடல்‌
d) பாடல்‌

ii) விழாக்கள்‌ எவற்றின்‌ வெளிப்பாடாக உள்ளது?

a) மொழி
b) ஆளுமை
c) பண்பாடு
d) கல்வி

iii) இந்திரவிழா எந்நகரோடு தொடர்புடையது?

a) புகார்‌
b) மதுரை
c) கேரளம்‌
d) வங்காளம்‌

iv) இந்திர விழாவின்‌ போது தெருக்களில்‌ பரப்பப்பட்டது யாது?

a) பூக்கள்‌
b) புது மணல்‌
c) பொடிகள்‌
d) வாசனை திரவியங்கள்‌

v) எத்தனை நாட்கள்‌ இந்திர விழா நடைபெற்றன?

a) 8
b) 12
c) 28
d) 20

2) காலில்‌ காயத்திற்குக்‌ கட்டுப்‌ போட்டிருந்த இளைஞன்‌ ஒருவன்‌ பேருந்தில்‌ ஏறினான்‌. “எந்த ஊருக்குப்‌ பயணச்சீட்டு வேண்டும்‌?” என்று நடத்துனர்‌ கேட்டார்‌. அதே நேரம்‌ அருகிலிருந்த ஒருவர்‌ ‘உன்‌ காலில்‌ எதனால்‌ காயம்‌ ஏற்பட்டது?’ என்று கேட்டார்‌. அதற்கு அவன்‌ ‘செங்கல்பட்டு’ என்று கூறினான்‌. அவன்‌ கூறியது இருவரின்‌ வினாவிற்கும்‌ பொருத்தமான விடையாக அமைந்தது. அவன்‌ செல்ல வேண்டிய ஊர்‌ செங்கல்பட்டு என்று நடத்துனர்‌ புரிந்து கொண்டார்‌. அவன்‌ காலில்‌ செங்கல்‌ பட்டு காயம்‌ ஏற்பட்டது என மற்றவர்‌ புரிந்து கொண்டனர்‌. இவ்வாறு ஒரு சொல்‌ அல்லது தொடர்‌ இரு பொருள்‌ தருமாறு அமைவது “இரட்டுற மொழிதல்‌” என்னும்‌ அணியாகும்‌. இதனைச்‌ சிலேடை என்றும்‌ கூறுவர்‌.

i) இப்பத்தியில்‌ பயின்று வரும்‌ அணி யாது?

a) தற்குறிப்பேற்ற அணி
b) சிலேடை அணி
c) உவமையணி
d) எடுத்துக்காட்டு உவமையணி

ii) இப்பத்தியில்‌ இடம்‌ பெறும் ஊரின்‌ பெயர்‌?

a) காஞ்சிபுரம்‌
b) மாம்பட்டு
c) செங்கோட்டை
d) செங்கல்பட்டு

iii) இளைஞன்‌ பயணம்‌ செய்த வாகனம்‌ எது?

a) மகிழுந்து
b) சிற்றுந்து
c) பேருந்து
d) தொடர்வண்டி

iv) இப்பத்தியில்‌ இடம்‌ பெறும் வினாத்‌ தொடரைத்‌ தேர்ந்தெடு

a) உன்‌ பயணச்சீட்டைக்‌ கொடு
b) உன்‌ பயணச்சீட்டு
c) உன்‌ பயணச்சீட்டைப்‌ பெற்றுக்‌ கொள்
d) எந்த ஊருக்கு பயணச்சீட்டு வேண்டும்‌?

v) இளைஞனுக்கு அடிப்பட்ட இடம்‌ குறிப்பிடு

a) தலை
b) கால்‌
c) கை
d) உடல்‌

TNPSC Master