பிழை திருத்தம்‌ (I) சந்திப்பிழையை நீக்குதல்‌ (II) மரபுப்‌ பிழைகள்‌, வழுவுச்‌ சொற்களை நீக்குதல்‌ / பிறமொழிச்‌ சொற்களை நீக்குதல் (PYQ)

1) வழுவுச்‌ சொற்களை நீக்கி எழுதுக.
I) குலசேகர ஆழ்வார்‌ “வித்துவக்கோட்டம்மா” என்று ஆண்‌ தெய்வத்தை அழைத்துப்‌ பாடுகிறார்‌.
II) பூனையார்‌ பால்‌ சோற்றைக்‌ கண்டதும்‌ வருகிறார்‌.
ஆகிய தொடர்களில்‌ இடம்‌ பற்றுள்ள வழுவமைதி முறையே

a) மரபு வழுவமைதி, திணை வழுவமைதி
b) இட வழுவமைதி, மரபு வழுவமைதி
c) பால்‌ வழுவமைதி, திணை வழுவமைதி
d) கால வழுவமைதி, இட வழுவமைதி

2) பிழையற்ற சொற்றொடரைக்‌ கண்டறிக.

a) ஏறியில்‌ குளித்து விட்டு மலை மீது ஏரினான்‌
b) ஏரியில்‌ குளித்து விட்டு மலை மீது ஏறினான்‌
c) ஏரியில்‌ குளித்து விட்டு மலை மீது ஏரினான்‌
d) ஏறியில்‌ குளித்து விட்டு மலை மீது ஏறினான்‌

3) பிழை நீக்கி எழுதுக.
துன்பத்தால்‌ பொறுத்துக்‌ கொள்பவனே வெற்றி பெறுவான்‌.

a) துன்பம்‌
b) துன்பத்தைப்‌
c) துன்பம்‌ உடையவனை
d) துன்புறுபவனை

4) சந்திப்‌ பிழையைச்‌ சரிபார்த்து எழுதுக

a) சிற்பகலை கூடமாக திகழ்கிறது
b) சிற்பக்கலை கூடமாக திகழ்கிறது
c) சிற்பக்கலைக்‌ கூடமாகத்‌ திகழ்கிறது
d) சிற்பக்கலைக்‌ கூடமாக திகழ்கிறது

5) மரபுப்‌ பிழையற்றதை எடுத்து எழுதுக

a) தென்னந்தோப்பு
b) தென்னந்தோட்டம்‌
c) தென்னைவயல்‌
d) தென்னங்காடு

6) வழுவற்ற தொடர்‌ எது?

a) நேற்று வருவான்‌
b) நேற்று வந்தான்‌
c) நேற்று வருகிறான்‌
d) நேற்று வா

7) வழுஉச்‌ சொல்லற்றத்‌ தொடர்‌ எது?

a) தென்னை மரங்கள்‌ உள்ள பகுதி தென்னந்தோட்டம்‌ என்பர்‌
b) தென்னை மரங்கள்‌ உள்ள பகுதி தென்னந்தோப்பு என்பர்‌
c) தென்னை மரங்கள்‌ தென்னங்காடு என்பர்‌
d) தென்னை மரங்கள்‌ உள்ள பகுதி தென்னங்கூட்டம்‌ என்பர்‌

8) மரபுப்பிழை நீக்குக
பால் குடித்தான்‌

a) பருகினான்‌
b) சாப்பிட்டான்‌
c) உண்டான்‌
d) சுவைத்தான்‌

9) சந்திப்‌ பிழையை நீக்குக
கண்காணிப்பு கருவி, அசைவு நிகழும்‌ பக்கம்‌ தன்‌ பார்வையை திருப்புகிறது.

a) கண்க்காணிப்புக்‌ கருவி அசைவு நிகழும்ப்‌ பக்கம்‌ தன்‌ பார்வையைத்‌ திருப்புகிறது
b) கண்காணிப்புக்‌ கருவி அசைவு நிகழும்‌ பக்கம்‌ தன்‌ பார்வையைத்‌ திருப்புகிறது
c) கண்க்காணிப்புக்‌ கருவி, அசைவு நிகழும்‌ பக்கம்‌ தன்‌ பார்வையை திருப்புகிறது.
d) கண்க்காணிப்பு கருவி, அசைவு நிகழும்‌ பக்கம்‌ தன்‌ பார்வையைத்‌ திருப்புகிறது

10) கோழி கூவும்‌ – மரபுப்‌ பிழையை நீக்குக

a) கோழி குறுகும்‌
b) கோழி கொக்கரிக்கும்‌
c) கோழி அகவும்‌
d) கோழி கரையும்‌