1) ஒலி மற்றும் பொருள் வேறுபாடறிந்து சரியான பொருளைக் கண்டறிக. (குளவி – குழவி)
a) குழந்தை – வண்டு
b) கோழை – குளை
c) வண்டு – குழந்தை
d) கிளவி – நெகிழ்தல்
2) ஒலி மற்றும் பொருள் வேறுபாடறிந்து சரியான பொருளை எழுதுக.
a) என் வீட்டுத் தோட்டத்தில் மலர்கள் மனம் வீசின
b) என் வீட்டுத் தோட்டத்தில் மலர்கள் மணம் வீசின
c) என் வீட்டுத் தோட்டத்தில் மலர்கள் மனம் வீசிந
d) என் வீட்டுத் தோட்டத்தில் மலர்கள் மணம் வீசிந
3) ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைக் கண்டறிக [பரவை – பறவை]
a) பரவுதல் – பறத்தல்
b) ஆழி – இறகு
c) பரப்புதல் – பெயர்ச்சொல்
d) கடல் – புள்
4) ஒலி மற்றும் பொருள் வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்
விலை – விளை
a) விருப்பம் உண்டாக்குதல்
b) பொருளின் மதிப்பு – உண்டாக்குதல்
c) இன்பம் – துன்பம்
d) மதிப்பு – விருப்பம்
5) பொருள் வேறுபாடறிந்து சரியானவற்றைத் தேர்க
வாசலில் போடுவது ————, பந்தின் வடிவம் ————
a) கோலம், கோளம்
b) கோளம், கோடு
c) பூ, வட்டம்
d) கோல், கோள்
6) ஒலி வேறுபாடு அறிந்து பொருள் கூறு
கூரை, கூறை
a) புடவை, வீட்டின் கூரை
b) வீட்டின் தரை, புடவை
c) வீட்டின் தரை, புடவைக்கரை
d) வீட்டின் கூரை, புடவை
7) ஒலி மற்றும் பொருள் வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்
ஏரி – ஏறி
a) ஆறு – ஆற்றுப்படுத்தல்
b) ஏறுதல் – எறிதல்
c) ஆறு – குளம்
d) நீர்நிலை – மேலே சென்று
8) ஒலி வேறுபாடறிந்து சரியான இணையைத் தேர்வு செய்:
மரை – மறை
a) மறைதல் – மறைத்தல்
b) தாமரை – மறத்தல்
c) தாமரை-மறைத்தல்
d) ஆணி – மறைதல்
9) வலி, வளி, வழி – ஒலி வேறுபாடறிந்து பொருள் தருக.
a) துன்பம், காற்று, நெறி
b) காற்று, நெறி, துன்பம்
c) நெறி, காற்று, துன்பம்
d) துன்பம், நெறி, காற்று
10) ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளை எழுதுக
a) ஒலி – நீங்கு
b) ஒளி – வெளிச்சம்
c) ஒழி – சீற்றம்
d) கழி – சத்தம்