ஒரு பொருள்‌ தரும்‌ பல சொற்கள்‌ (PYQ)

1) ஒரு பொருள்‌ தரும்‌ இரு சொற்களைத்‌ தருக. (இசை)

a) அசை, அசைவு
b) புகழ்‌, இசைவு
c) மாலை, பூமாலை
d) ஓசை, குழலோசை

2) ஒரு பொருள்‌ தரும்‌ பல சொற்கள்‌ ( ‘திங்கள்‌’ )

a) கிழமை, சூரியன்‌
b) சந்திரன்‌, மாதம்‌
c) சந்திரன்‌, சூரியன்‌
d) நிலவு, அறவு

3) ஒரு பொருள்‌ தரும்‌ பல சொற்கள்‌.
சொல்லுதல்‌

a) மொழிதல்‌, வாசித்தல்‌
b) செப்புதல்‌, கூறல்‌
c) உரைத்தல்‌, கேட்டல்‌
d) விளம்புதல்‌, கவனித்தல்‌

4) ஒரு பொருள்‌ தரும்‌ பல சொற்கள்‌
பிள்ளை, குட்டி, மடலி, வடலி, கன்று ஆகிய சொற்கள்‌ எதனைக்‌ குறிக்கும்‌?

a) இளம்‌ விலங்கினம்‌
b) தென்னை ஓலை
c) இலைகள்‌
d) இளம்‌ பயிர்‌ வகை

5) ஒரு பொருள்‌ தரும்‌ பல சொற்கள்‌ – அணி

a) அணிகலன்‌, அழகு
b) இலக்கணம்‌, அணில்‌
c) ஆடை, அணிதல்‌
d) நகைகள்‌, அணிதல்‌

6) மரம்‌, விலங்கு, பெரிய, அழகு, வண்டு எனப்‌ பொருள்‌ தரும்‌ சொல்லை எழுதுக.

a) தா
b) மா
c) தீ
d) பூ

7) ‘மதி’ என்பதன்‌ தவறான பொருளைத்‌ தேர்ந்தெடுக்க.

a) அறிவு
b) நிலவு
c) ஞானம்‌
d) பகலவன்‌

8) ‘வேழம்‌’ என்பதன்‌ தவறான பொருளைத்‌ தேர்ந்தெடுக்க.

a) பிடி
b) களிறு
c) சிங்கம்‌
d) பெண் யானை

9) ஒரு பொருள்‌ தரும்‌ பல சொற்கள்‌ “ஈ” என்பதன்‌ தவறான பொருளைத்‌ தேர்ந்தெடுக்க.

a) உயிரெழுத்து
b) ஒரு வகை பறவை
c) அணிகலன்‌
d) பகிர்ந்து கொடு

10) ஒரு பொருள்‌ கரும்‌ பல சொற்கள்‌
வடு, மூசு, குரும்பை, கச்சல்‌ ஆகிய சொற்கள்‌ எதனைக்‌ குறிக்கும்‌?

a) பிஞ்சு வகை
b) காய் வகை
c) கனி வகை
d) குலை வகை