வேர்ச்சொல்லைத்‌ தேர்வு செய்தல்‌ (PYQ)

1) உறங்கினாள்‌ – வினைமுற்றுக்குரிய வேர்ச்சொல்லைக் கண்டறிக.

a) உற
b) உறங்கு
c) உறங்‌
d) உறங்குதல்‌

2) வேர்ச்சொல்லைத்‌ தேர்வு செய்க. (தருகின்றனர்‌)

a) தரு
b) தருகு
c) தா
d) த

3) “தருகுவென்‌” – என்பதன்‌ வேர்ச்சொல்‌ கண்டறிக.

a) தரு
b) தருகு
c) தா
d) தருவேன்‌

4) “காப்பார்‌” – என்பதன்‌ வேர்ச்சொல்‌ கண்டறிக

a) காப்பு
b) கா
c) காத்து
d) காத்தான்‌

5) சென்றனர் – வேர்ச்சொல்லைத்‌ தருக.

a) சென்றான்‌
b) சென்ற
c) சென்று
d) செல்

6) வேர்ச்சொல்லைத்‌ தெரிவு செய்க
“மகிழ்வித்தனன்‌”

a) மகிழ்ச்சி
b) மகிழ்‌
c) மகிழ்வி
d) மகிள்‌

7) நடப்பாள்‌ – இச்சொல்லின்‌ வேர்ச்சொல்லைக்‌ கண்டறிக

a) நடந்த
b) நட
c) நடந்து
d) நடந்தன

8) வேர்ச்‌ சொல்லைத்‌ தேர்வு செய்க
“வந்தான்‌”

a) வந்த
b) வ
c) வந்து
d) வா

9) ‘கண்டார்‌’ – என்பதன்‌ வேர்ச்சொல்‌ கண்டறிக

a) கண்‌
b) கண்ட
c) காண்‌
d) கண்டு

10) நடத்தல்‌ – என்பதன்‌ வேர்ச்சொல்லை எழுதுக.

a) நடந்த
b) நடந்து
c) நட
d) நடந்தவர்‌

TNPSC Master