வேர்ச்சொல்லைக்‌ கொடுத்து / வினைமுற்று, வினையெச்சம்‌, வினையாலணையும்‌ பெயர்‌, தொழிற்‌ பெயரை / உருவாக்கல்‌ (PYQ)

1) வேர்ச்சொல்லின்‌ வினையாலணையும்‌ பெயர்‌ காண்க (படி)

a) படித்த
b) படித்து
c) படித்தவர்‌
d) படித்தது

2) வினையாலணையும்‌ பெயரைத்‌ தேர்ந்தெடு : (வா)

a) வந்தவர்‌
b) வந்தான்‌
c) வருகின்றான்‌
d) வந்தார்‌

3) பின்வரும்‌ வேர்ச்‌சொல்லுக்குரிய வினைமுற்றைக்‌ கண்டறி : (தா)

a) தந்த
b) தருகின்றனர்‌
c) தந்து
d) தந்தவர்‌

4) ‘சிரி’ எனும்‌ வேர்ச்‌சொல்லின்‌ வினையாலணையும்‌ பெயர்‌ வடிவம்‌ தருக.

a) சிரித்து
b) சிரித்தவள்‌
c) சிரித்த
d) சிரித்தல்‌

5) ‘உண்’ – எனும்‌ வேர்ச்சொல்லில் இருந்து வினையாலணையும்‌ பெயரைக்‌ கண்டுபிடிக்க

a) உண்டான்‌
b) உண்டவன்‌
c) உண்டு
d) உண்ட

6) கொடுக்கப்பட்ட வேர்ச்‌ சொல்லின்‌ வினையாலணையும்‌ பெயரைக்‌ கண்டறிக. (கொடு)

a) கொடுத்தான்‌
b) கொடு
c) கொடுத்தோர்‌
d) கொடுத்து

7) வேர்ச்‌ சொல்லைக்‌ கொடுத்து தொழிற்‌பெயரை உருவாக்கல்‌
கொடு

a) கொடுத்து
b) கொடுக்கிறான்‌
c) கொடுத்தல்‌
d) கொடுத்த

8) வேர்ச்‌ சொல்லுக்குரிய வினைமுற்றைக்‌ கண்டுபிடி
போ

a) போனான்‌
b) போகிற
c) போகின
d) போகுவார்‌

9) “படி” என்பதன்‌ வினையாலணையும்‌ பெயர்‌

a) படித்தான்‌
b) படித்த
c) படித்தவர்‌
d) படித்தல்‌

10) பின்வருவனவற்றுள்‌ ஏவல்‌ வினைமுற்றுச்‌ சொல்‌ எது ?

a) செல்க
b) ஓடு
c) வாழிய
d) வாழ்க