1) The movement of the Earth on its axis is called
a) Revolution
b) Seasons
c) Rotation
d) Circulation
1) புவி தன் அச்சில் சுழல்வதை இவ்வாறு அழைக்கிறோம்
a) சுற்றுதல்
b) பருவகாலங்கள்
c) சுழல்தல்
d) ஓட்டம்
2) The Tropic of Capricorn faces the Sun directly on
a) March 21
b) June 21
c) September 23
d) December 22
2) மகரரேகையில் சூரியக் கதிர்கள் செங்குத்தாக விழும் நாள்
a) மார்ச் 21
b) ஜன் 21
c) செப்டம்பர் 23
d) டிசம்பர் 22
3) The galaxy in which our solar system is found is
a) Andromeda
b) Magellanic clouds
c) Milky Way
d) Starburst
3) சூரியக் குடும்பம் அடங்கியுள்ள விண்மீன் திரள் மண்டலம்
a) ஆண்டிரோமெடா
b) மெகலனிக்கிளவுட்
c) பால்வெளி
d) ஸ்டார்பர்ஸ்ட்
4) The only celestial body where man has successfully landed
a) Mars
b) Moon
c) Mercury
d) Venus
4) மனிதன் தன் காலடியைப் பதித்துள்ள ஒரே விண்பொருள்
a) செவ்வாய்
b) சந்திரன்
c) புதன்
d) வெள்ளி
5) Which of the following planets can float on water?
a) Jupiter
b) Saturn
c) Uranus
d) Neptune
5) எந்த கோளால் தண்ணீரில் மிதக்க இயலும்?
a) வியாழன்
b) சனி
c) யுரேனஸ்
d) நெப்டியூன்
6) Consider the following statements.
1) Venus rotates from east to west.
2) The Tropic of Cancer faces the Sun on June 21.
3) Mars has rings around it.
Choose the correct answer using the codes given below.
a) 1 and 2
b) 2 and 3
c) 1, 2 and 3
d) 2 only
6) கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்க.
1) வெள்ளிக் கோள் கிழக்கிலிருந்து மேற்காகச் சுற்றுகிறது
2) ஜுன் 21ம் நாளன்று கடகரேகையில் சூரியக் கதிர் செங்குத்தாக விழும்
3) செவ்வாய்க் கோளுக்கு வளையங்கள் உண்டு
மேற்கூறிய கூற்றுகளில் சரியானவற்றைக் கீழே கொடுக்கப்பப்டுள்ள குறியீடுகளைப் பயன்படுத்திக் கண்டறிக
a) 1 மற்றும் 2
b) 2 மற்றும் 3
c) 1, 2 மற்றும் 3
d) 2 மட்டும்
7) Consider the following statements
Statement I : Earth is called a watery planet.
Statement II : The rotation of the Earth causes seasons.
Which of the Statement(s) is/are true?
a) I is true; II is wrong
b) I is wrong; II is true
c) Both the statements are true
d) Statements I and II are wrong
7) கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்க
கூற்று 1 : புவி, நீர்க்கோளம் என அழைக்கப்படுகிறது.
கூற்று 2 : புவி தன் அச்சில் சுழலுவதால் பருவ காலங்கள் ஏற்படுகின்றன.
சரியான கூற்றினை தேர்ந்தெடுத்து எழுதுக.
a) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
b) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
c) இரண்டு கூற்றுகளும் சரி
d) இரண்டு கூற்றுகளும் தவறு
8) The Universe was formed after ———— explosion
a) Big Bang
b) Nuclear Fission
c) Small Bang
d) Nuclear Fission
8) பேரண்டம் உருவாகக் காரணமான நிகழ்வு ————
a) பெரு வெடிப்பு
b) அணுகரு பிளவு
c) சிறு வெடிப்பு
d) அணுகரு இணைவு
9) ———— is the unit used to measure the distance between two celestial bodies.
a) Light year
b) Sound
c) Distance
d) None
9) இரு வான்பொருட்களுக்கு இடையிலான தொலைவை அளக்க உதவும் அளவு ———— ஆகும்.
a) ஒளி ஆண்டு
b) ஒலி
c) தொலைவு
d) ஏதுமில்லை
10) ———— is the centre of the solar system
a) Sun
b) Mercury
c) Jupiter
d) Saturn
10) சூரியக் குடும்பத்தின் மையம் ————
a) சூரியன்
b) புதன்
c) வியாழன்
d) சனி