Fertilizers and Pesticides (SBQ)

1) ———— is called as farmer’s best friend.

a) Earthworm
b) Urea
c) Fertilisers
d) Compost

1) உழவனின்‌ நண்பன்‌ என அழைக்கப்படுவது ———— ஆகும்‌.

a) மண்புழு
b) யூரியா
c) உரம்‌
d) தொழு உரம்‌

2) ———— fertiliser is eco-friendly.

a) Inorganic
b) Organic
c) Nitrogen
d) Oxygen

2) சுற்றுச்சூழலுக்கு உகந்தவை ———— உரங்கள்‌ ஆகும்‌.

a) கனிம
b) இயற்கை (அ) கரிம
c) நைட்ரஜன்‌
d) ஆக்ஸிஜன்‌

3) Urea : Inorganic fertiliser : Vermicompost : ————

a) Inorganic fertiliser
b) Fertiliser
c) Organic fertiliser
d) Inorganic waste

3) யூரியா : கனிம உரம்‌ :: மண்புழு உரம்‌ : ————

a) கனிம உரம்‌
b) உரம்‌
c) கரிம உரம்‌
d) கனிம குப்பை

4) ———— is the basic material to manufacture urea.

a) Ammonia
b) Hydrogen
c) Nitrogen
d) CO2

4) ———— யூரியா தயாரிப்பதில்‌ அடிப்படைப்‌ பொருளாக உள்ளது.

a) அம்மோனியா
b) ஹைட்ரஜன்‌
c) நைட்ரஜன்‌
d) CO2

5) Chlorinated hydrocarbons are used as

a) fertilisers
b) pesticides
c) food colourants
d) preservatives

5) குளோரினேற்றப்பட்ட ஹைட்ரோ கார்பன்கள்‌ ———— ஆக பயன்படுத்தப்படுகின்றன.

a) உரங்கள்‌
b) பூச்சிக்கொல்லிகள்‌
c) உணவு நிறமிகள்‌
d) உணவு பதப்படுத்திகள்‌

6) ————, ———— and ———— are macronutrients required for plant growth.

a) Nitrogen, Potassium, sulphur
b) Nitrogen, Phosphorous, Potassium
c) Nitrogen, Phosphorous, Oxygen
d) Nitrogen, Sulphur, Oxygen

6) ————, ———— மற்றும்‌ ———— ஆகியவை தாவர வளர்ச்சிக்குத்‌ தேவையான பெரும நுண்‌ ஊட்டத்‌ தனிமங்கள்‌ ஆகும்‌.

a) நைட்ரஜன்‌, பொட்டாசியம்‌, சல்பர்‌
b) நைட்ரஜன்‌, பாஸ்பரஸ்‌, பொட்டாசியம்‌
c) நைட்ரஜன்‌, பாஸ்பரஸ்‌, ஆக்சிஜன்‌
d) நைட்ரஜன்‌, சல்பர்‌, ஆக்சிஜன்‌