1) The chief ore of Aluminium is ————

a) Bauxite
b) Hematite
c) Copper pyrites
d) Iron pyrite

1) அலுமினியத்தின்‌ முக்கிய தாது ———— ஆகும்‌

a) பாக்சைட்‌
b) ஹேமடைட்‌
c) காப்பர்‌ பைரைட்‌
d) இரும்பு பைரைட்‌

2) Bauxite has the composition

a) Al2O3
b) Al2O3.nH2O
c) Fe2O3.2H2O
d) None of these

2) பாக்ஸைட்டின்‌ இயைபு

a) Al2O3
b) Al2O3.nH2O
c) Fe2O3.2H2O
d) இவை எதுவுமல்ல

3) Roasting of sulphide ore gives the gas (A).(A) is a colourless gas. Aqueous solution of (A) is acidic. The gas (A) is

a) CO2
b) SO3
c) SO2
d) H2S

3) ஒரு சல்பைடு தாதுவை வறுக்கும்‌ போது (A) என்ற நிறமற்ற வாயு வெளியேறுகிறது. (A)ன் நீர்க்கரைசல்‌ அமிலத்தன்மை உடையது. வாயு (A) ஆனது

a) CO2
b) SO3
c) SO2
d) H2S

4) Which one of the following reaction represents calcination?

a) 2Zn + O2 → 2ZnO
b) 2ZnS + 3O2 → 2ZnO + 2SO2
c) MgCO3 → MgO + CO2
d) Both (a) and (c)

4) பின்வரும்‌ வினைகளில்‌, எவ்வினையானது காற்றில்லா சூழலில்‌ வறுத்தலைக்‌ (Calcination) குறிப்பிடுகிறது?

a) 2Zn + O2 → 2ZnO
b) 2ZnS + 3O2 → 2ZnO + 2SO2
c) MgCO3 → MgO + CO2
d) (a) மற்றும்‌ (c)

5) The metal oxide which cannot be reduced to metal by carbon is

a) PbO
b) Al2O3
c) ZnO
d) FeO

5) கார்பனைக்‌ கொண்டு உலோகமாக ஒடுக்க இயலாத உலோக ஆக்ஸைடு

a) PbO
b) Al2O3
c) ZnO
d) FeO

6) Which of the metal is extracted by the Hall-Heroult process?

a) Al
b) Ni
c) Cu
d) Zn

6) ஹால்‌ ஹெரால்ட்‌ செயல்முறையின்படி பிரித்தெடுக்கப்‌ படும்‌ உலோகம்‌

a) Al
b) Ni
c) Cu
d) Zn

7) Which of the following Statements, about the advantage of roasting of sulphide ore before reduction is not true?

a) ΔGf° of sulphide is greater than those for CS2 and H2S
b) ΔGr° is negative for roasting of Sulphide ore to oxide.
c) Roasting of the sulphide to its oxide is thermodynamically feasible.
d) Carbon and hydrogen are suitable reducing agents for metal sulphides.

7) ஒடுக்க வினைக்கு உட்படுத்தம்‌ முன்னர்‌, சல்பைடு தாதுக்களை வறுத்தலில்‌ ஏற்படும்‌ நன்மையினைப்‌ பொருத்து பின்வரும்‌ கூற்றுகளில்‌ தவறானது எது?

a) CS2 மற்றும்‌ H2S ஆகியவற்றைக்‌ காட்டிலும்‌ சல்பைடின்‌ ΔGf° மதிப்பு அதிகம்‌
b) சல்பைடை வறுத்து ஆக்ஸைடாக மாற்றும்‌ வினைக்கு ΔGr° மதிப்பு எதிர்க்குறியுடையது.
c) சல்பைடை அதன்‌ ஆக்ஸைடாக வறுத்தல்‌ என்பது ஒரு சாதகமான வெப்ப இயக்கவியல்‌ செயல்முறையாகும்‌.
d) உலோக சல்பைடுகளுக்கு, கார்பன்‌ மற்றும்‌ ஹைட்ரஜன்‌ ஆகியன தகுந்த பொருத்தமான ஒடுக்கும்‌ காரணிகளாகும்‌.

8) Match items in list – I with the Items of list – II and assign the correct code.
A) Cyanide process – 1) Ultrapure Ge
B) Froth flotation process – 2) Dressing of ZnS
C) Electrolytic reduction – 3) Extraction of Al
D) Zone refining – 4) Extraction of Au
– 5) Purification of Ni

a) 1, 2, 3, 4
b) 3, 4, 5, 1
c) 4, 2, 3, 1
d) 2, 3, 1, 5

8) பட்டியல்‌ I-ல்‌ உள்ளனவற்றைப்‌ பட்டியல்‌ II-ல்‌ உள்ளனவற்றுடன்‌ பொருத்தித்‌ தகுந்த விடையினைத்‌ தெரிவுச்‌ செய்க.
A) சயனைடு செயல்முறை – 1) மிகத்தூய்மையான Ge
B) நுரை மிதத்தல்‌ செயல்முறை – 2) ZnS தாதுவை அடர்பித்தல்‌
C) மின்னாற்‌ ஒடுக்குதல்‌ – 3) Al பிரித்தெடுத்தல்‌
D) புலத்தூய்மையாக்கல்‌ – 4) Au பிரித்தெடுத்தல்‌
– 5) Ni ஐத்‌ தூயமையாக்குதல்‌

a) 1, 2, 3, 4
b) 3, 4, 5, 1
c) 4, 2, 3, 1
d) 2, 3, 1, 5

9) Wolframite ore is separated from tinstone by the process of

a) Smelting
b) Calcination
c) Roasting
d) Electromagnetic separation

9) உல்ப்ரமைட்‌ (Wolframite) தாதுவை வெள்ளீயக்கல்லில்‌ (tinstone) இருந்து பிரித்தெடுக்கும்‌ முறை

a) உருக்குதல்‌
b) காற்றில்லாச்‌ சூழலில்‌ வறுத்தல்‌
c) வறுத்தல்‌
d) மின்காந்தப்‌ பிரிப்பு முறை

10) Which one of the following is not feasible

a) Zn(s) + Cu2+ (aq) → Cu(s) + Zn2+ (aq)
b) Cu(s) + Zn2+ (aq) → Zn(s) + Cu2+ (aq)
c) Cu(s) + 2Ag+ (aq) → 2Ag(s) + Cu2+ (aq)
d) Fe(s) + Cu2+ (aq) → Cu(s) + Fe2+ (aq)

10) பின்வருவனவற்றுள்‌ நிகழ வாய்ப்பில்லாத வினை எது?

a) Zn(s) + Cu2+ (aq) → Cu(s) + Zn2+ (aq)
b) Cu(s) + Zn2+ (aq) → Zn(s) + Cu2+ (aq)
c) Cu(s) + 2Ag+ (aq) → 2Ag(s) + Cu2+ (aq)
d) Fe(s) + Cu2+ (aq) → Cu(s) + Fe2+ (aq)