இலக்கணக் குறிப்பறிதல் (PQ)

1) ஈக –

a) குறிப்பு வினைமுற்று
b) வியங்கோள் வினைமுற்று
c) தொழிற்பெயர்
d) நீட்டல் விகாரம்

2) கங்கையும் சிந்துவும் –

a) அன்மொழித்தொகை
b) உம்மைத்தொகை
c) பெண்பால் பெயர்கள்
d) எண்ணும்மை

3) வாழ்க –

a) முன்னிலை வினைமுற்று
b) ஏவல் வினைமுற்று
c) வியங்கோள் வினைமுற்று
d) தன்மை வினைமுற்று

4) பச்சைக் கிளியே வா வா –

a) உருவகம்
b) உவமை
c) எண்ணும்மை
d) அடுக்குத்தொடர்

5) இரவும் பகலும் –

a) அன்மொழித்தொகை
b) உம்மைத்தொகை
c) பெண்பால் பெயர்கள்
d) எண்ணும்மை

6) அவன் உழவன் –

a) தொழிற்பெயர்
b) தெரிநிலை வினைமுற்று
c) குறிப்பு வினைமுற்று
d) பெயர்ச் சொல்

7) பேரொளி –

a) உவமைத் தொகை
b) வினைத் தொகை
c) வினையாலணையும் பெயர்
d) பண்புத் தொகை

8) ஆடுகொடி –

a) வினைத் தொகை
b) உவமைத் தொகை
c) ஆகு பெயர்
d) தொழிற்பெயர்

9) பளபள –

a) அடுக்குத் தொடர்
b) உம்மைத் தொகை
c) வினைத் தொகை
d) இரட்டைக் கிளவி

10) இனிய நண்ப –

a) குறிப்பு வினையெச்சம்
b) குறிப்புப் பெயரெச்சம்
c) தெரிநிலை பெயரெச்சம்
d) எதிர்மறைப் பெயரெச்சம்