எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல் (PQ)

1) மை விழியும், மான் விழியும் இணை பிரியாது எங்கு சென்றாலும் ஒன்றாகவே சென்றனர்.

a) செய்திவாக்கியம்
b) தனிவாக்கியம்
c) கலவை வாக்கியம்
d) தொடர்வாக்கியம்

2) பாரதியார் பாடல்களின் இனிமைதான் என்னே!

a) உணர்ச்சி வாக்கியம்
b) செய்தி வாக்கியம்
c) வினா வாக்கியம்
d) தனி வாக்கியம்

3) வகுப்பில் மாணவர்கள் அமர்ந்திருந்தனர்.

a) செய்தி வாக்கியம்
b) நேர்கூற்று வாக்கியம்
c) உடன்பாட்டு வாக்கியம்
d) கட்டளை வாக்கியம்

4) அறம் செய்.

a) தொடர் வாக்கியம்
b) நேர்கூற்று வாக்கியம்
c) கட்டளை வாக்கியம்
d) அயற்கூற்று வாக்கியம்

5) நீ எத்தனை புத்தகங்களைப் படித்திருக்கிறாய்?

a) தனி வாக்கியம்
b) செய்தி வாக்கியம்
c) உணர்ச்சி வாக்கியம்
d) வினா வாக்கியம்

6) உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ

a) உணர்ச்சி வாக்கியம்
b) செய்தி வாக்கியம்
c) வினா வாக்கியம்
d) உடன்பாட்டு வாக்கியம்

7) நாள்தோறும் உடற்பயிற்சி செய்

a) உணர்ச்சித் தொடர்
b) கட்டளைத்தொடர்
c) செய்தித் தொடர்
d) உடன்பாட்டுத் தொடர்

8) ஆமைகள் வேகமாக ஓடா.

a) செய்தி வாக்கியம்
b) நேர்கூற்று வாக்கியம்
c) அயற்கூற்று வாக்கியம்
d) எதிர்மறை வாக்கியம்

9) ஐயகோ! நேருஜி மறைந்தாரே!

a) உணர்ச்சி வாக்கியம்
b) நேர்கூற்று வாக்கியம்
c) கட்டளை வாக்கியம்
d) அயற்கூற்று வாக்கியம்

10) பெரியவர்களை வணங்கு

a) கட்டளை வாக்கியம்
b) தனி வாக்கியம்
c) தொடர் வாக்கியம்
d) கலவை வாக்கியம்

TNPSC Master