தமிழர் வணிகம் – தொல்லியல் ஆய்வுகள் – கடற்பயணங்கள் – தொடர்பான செய்திகள் (PQ)

1) தீம்பிழி எந்திரம் பந்தல் வருந்த இந்த வரிகள் இடம் பெற்றுள்ள நூல் எது?

a) பரிபாடல்
b) பெருங்கதை
c) சீவகசிந்தாமணி
d) பதிற்றுப்பத்து

2) உலகினில் நாகரிகம் முற்றும் அழிந்து விட்டாலும் திருக்குறளும் கம்பன் காவியமும் இருந்தால் போதும்;மீண்டும் அதனைப் புதுப்பித்துவிடலாம் என்று கூறியவர் யார்?

a) பாரதியார்
b) ஜி.யு. போப்
c) கால்டுவெல்
d) பாரதிதாசன்

3) மனித நாகரிகத்தின் தொட்டில் என அழைக்கப்படுவது எது?

a) இலெமூரியா
b) ஆப்பிரிக்கா
c) ஹரப்பா
d) சிந்து சமவெளி

4) இன்றைய மொழியியல் வல்லுநர்கள் பேணிப் பின்பற்றத்தக்க வழிமுறைகளைத் தொல்காப்பியம் கூறுகின்றது என்றவர் யார்?

a) எமினோ
b) மாக்சு முல்லர்
c) கால்டுவெல்
d) கெல்லட்

5) பெருவெடிப்புக் கொள்கையின்படி இப்பேரண்டம் விரிவடைந்து நிற்பதைக் கூறும் பாடல் இடம்பெறும் நூல்

a) பதிற்றுப்பத்து
b) தேவாரம்
c) திருவாசகம்
d) புறநானூறு

6) குரூக், மால்தோ, பிராகுயி என்பன

a) மேலைநாட்டு மொழிகள்
b) தென் திராவிட மொழிகள்
c) நடுத்திராவிட மொழிகள்
d) வடதிராவிட மொழிகள்

7) தமிழுக்கு அரும்பணி ஆற்றிய அமெரிக்கப் பேராசிரியர்களில் ஒருவர்

a) ஜி.யு. போப்
b) ஆறுமுக நாவலர்
c) ஜோசப் கொன்ஸ்டான்
d) ஜேம்ஸ் பிராங்கா

8) ஆதிச்ச நல்லூரில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள் எந்த காலகட்டத்தைச் சார்ந்தவை?

a) கி.மு. 300 முதல் கி.பி. 300 வரை
b) கி.மு. 200 முதல் கி.பி. 200 வரை
c) கி.மு. 200 முதல் கி.பி. 300 வரை
d) கி.மு. 400 முதல் கி.பி. 400 வரை

9) மரக்கலத்தை குறிக்கும் நான்கு சொற்களை தேர்ந்தெடுக்க

a) கலம், பரிசில், ஆழி, பஃறி
b) கலம், தோணி, புணரி, மிதவை
c) கலம், பரிசில், ஓடம், பரவை
d) கலம், வங்கம், புணை, அம்பி

10) இப்போதுள்ள கல்வெட்டுகளிலேயே மிகப் பழமையானது

a) திருநாதர் குன்றம் கல்வெட்டு
b) உத்திரமேரூர்க் கல்வெட்டு
c) ஆதிச்சநல்லூர்க் கல்வெட்டு
d) அரியாங்குப்பம் கல்வெட்டு

TNPSC Master