1) எம்.ஜி.ஆர். திரைத்துறையில் கொடிக் கட்டிப் பறந்தார் – உவமையின் பொருளை எழுதுக.
a) நீண்ட காலமாக இருப்பது
b) புகழ்பெற்று விளங்குதல்
c) எண்ணி செயல்படாமை
d) விரைந்து வெளியேறுதல்
2) இரட்டை கிளவி போல் ———— உவமை கூறும் பொருள் யாதென கண்டறிக.
a) வளமை
b) வறுமை
c) வேற்றுமை
d) ஒற்றுமை
3) பொருந்தா இணையைக் கண்டறிக.
a) உள்ளங்கை நெல்லிக்கனிபோல – தெளிவு
b) நகமும் சதையும் போல – நப்பு
c) நீர் மேல் எழுத்து போல – நிலையின்மை
d) மழைமுகம் காணாப் பயிர்போல – உவகை
4) பொருத்துக.
A) ஊமை கண்ட கனவு போல – 1) நட்பு
B) உடுக்கை இழந்தவன் கை போல – 2) கொடை
C) வரையா மரபின் மாரி போல – 3) அடக்கம்
D) ஒருமையுள் ஆமை போல – 4) தவிப்பு
a) 4, 2, 3, 1
b) 1, 2, 3, 4
c) 4, 1, 2, 3
d) 4, 3, 2, 1
5) “அத்தி பூத்தாற்போல” – உவமை கூறும் பொருள் தெளிக.
a) வெகுமானம்
b) செயற்கரிய செயல்
c) அரியநிகழ்வு
d) துன்பச் செயல்
6) மலரும் மணமும் போல – உவமை கூறும் பொருள் தெளிக.
a) நட்பு
b) பகைமை
c) வேற்றுமை
d) ஒற்றுமை
7) உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தைடுத்தல்
‘விழலுக்கு இறைத்த நீர் போல’
a) பயனுள்ள செயல்
b) பயனற்ற செயல்
c) மிகுதியான செயல்
d) தகுதியான செயல்
8) ‘நகமும் சதையும் போல’ – உவமை கூறும் பொருள் தெளிக
a) வேற்றுமை
b) ஒற்றுமை
c) பகைமை
d) நட்பு
9) “முதலைக் கண்ணீர் – இம்மரபுத்தொடர் உணர்த்தும் பொருள் தெளிக:
a) முதலையின் கண்ணீர்
b) பொய்யழுகை
c) இல்லாத ஒன்று
d) அவலநிலை
10) ‘எலியும் பூனையும் போல’ உவமை கூறும் பொருளை எழுதுக
a) பகைமை
b) ஒற்றுமை
c) நட்பு
d) வேற்றுமை