நிறுத்தற்குறிகளை அறிதல்‌ (PYQ)

1) சரியான நிறுத்தற்குறியுடைய தொடரைத்‌ தேர்ந்தெடு

a) வணக்கம்‌, ஐயா, நான்‌ இணையத்‌ தமிழன்‌ பேசுகிறேன்‌.
b) வணக்கம்‌, ஐயா! நான்‌ இணையத்‌ தமிழன்‌ பேசுகிறேன்‌.
c) வணக்கம்‌ ஐயா! நான்‌ இணையத்‌ தமிழன்‌ பேசுகிறேன்‌.
d) வணக்கம்‌. ஐயா! நான்‌ இணையத்‌ தமிழன்‌ பேசுகிறேன்‌,

2) எது தவறான நிறுத்தக்குறியிட்ட தொடர்‌?

a) மாவட்ட ஆட்சியர்‌ கொடி ஏற்றினார்‌.
b) எழில்‌, என்ன சாப்பிட்டாய்‌?
c) மா, பலா, வாழை என்பன முக்கனிகள்‌.
d) கார்மேகம்‌ கடுமையாக உழைத்தார்‌, அதனால்‌ வாழ்வில்‌, உயர்ந்தார்‌.

3) நிறுத்தற்குறிகளை அறிதல்‌ எது சரியானது?

a) செல்வி பாடம்‌ படித்தாயா.
b) “உங்களைச்‌ சந்தித்ததில்‌ மிக்க மகிழ்ச்சி ஐயா!”
c) இந்த ஊரின்‌ பெயர்‌ என்ன, என்று கேட்டான்‌ கண்ணன்‌
d) பூ, பழம்‌. பாக்கு வாங்கி வா.

4) நிறுத்தற்குறிகளை அறிதல் :
மாணவர்கள்‌ ஆம்‌ என்பதைப்‌ போலத்‌ தலையாட்டினார்கள்‌

a) மாணவர்கள்‌ ஆம்‌, என்பதைப்‌ போலத்‌ தலையாட்டினார்கள்‌!
b) மாணவர்கள்‌, ஆம்‌ ! என்பதைப்‌ போலத்‌ தலையாட்டினார்கள்‌.
c) மாணவர்கள்‌ “ஆம்‌” என்பதைப்‌ போலத்‌ தலையாட்டினார்கள்‌.
d) மாணவர்கள்‌ ! ஆம்‌ என்பதைப்‌ போலத்‌ தலையாட்டினார்கள்‌.

5) நிறுத்தற்குறி அறிக (எது சரியானது)?

a) பாவை அண்ணனைப்‌, பார்த்து ‘அண்ணா எனக்கு ! ஓர்‌ உதவி செய்வாயா என்று கேட்டாள்‌.
b) பாவை அண்ணனைப்‌ பார்த்து அண்ணா? எனக்கு ஓர்‌ உதவி செய்வாயா? என்று கேட்டாள்‌.
c) பாவை அண்ணனைப்‌ பார்த்து, ‘அண்ணா எனக்கு ஓர்‌ உதவி செய்வாயா?’ என்று கேட்டாள்‌.
d) பாவை அண்ணனைப்‌ ‘பார்த்து அண்ணா ! எனக்கு ஓர்‌ உதவி செய்வாயா என்று கேட்டாள்‌.

6) நிறுத்தற் குறிகள்‌ அறிக.
சரியாக நிறுத்தற்குறியிட்டத்‌ தொடரைத்‌ தேர்ந்தெடு.

a) “உங்கள்‌ தந்தையும்‌ அரசரா!” என்றாள்‌ கயல்‌
b) “உங்கள்‌ தந்தையும்‌ அரசரா”? என்றாள்‌ கயல்‌.
c) உங்கள்‌ தந்தையும்‌ அரசரா? என்றாள்‌ கயல்‌.
d) உங்கள்‌ தந்தையும்‌, அரசரா ! என்றாள்‌ கயல்‌.

7) சரியான நிறுத்தற்குறி இட்ட சொற்றொடரினை தேர்ந்தெடு

a) “என்‌ அம்மை வந்தாள்‌” என்று மாட்டைப்‌ பார்த்துக்கூறுவது திணை வழுவமைதி ஆகும்‌.
b) “என்‌ அம்மை” வந்தாள்‌ – என்று மாட்டைப்‌ பார்த்துக்‌ கூறுவது “திணை வழுவமைதி” ஆகும்‌.
c) என்‌ அம்மை வந்தாள்‌ என்று மாட்டைப்‌ பார்த்துக்கூறுவது திணை வழுவமைதி ஆகும்‌.
d) (என்‌ அம்மை வந்தாள்‌ – என்று மாட்டைப்பார்த்துக்‌ கூறுவது திணை வழுவமைதி ஆகும்‌

8) நிறுத்தற்‌ குறியிடுக

a) ஆ. பூனையின்‌ காலில்‌ அடிபட்டுவிட்டதே
b) ஆ! பூனையின்‌ காலில்‌ அடிபட்டுவிட்டதே!
c) ஆ பூனையின்‌ காலில்‌ அடிபட்டுவிட்டதே.
d) ஆ! பூனையின்‌ காலில்‌ அடிபட்டுவிட்டதே

9) அகர வரிசைப்படி சொற்களைச்‌ சீர்‌ செய்க.
குச்சு, கிளை, கொம்பு, கவை, கொப்பு

a) கவை, கிளை, குச்சு, கொம்பு, கொப்பு
b) கவை, கிளை, குச்சு, கொப்பு, கொம்பு
c) கவை, குச்சு, கொம்பு, கொப்பு, கிளை
d) கவை, கிளை, கொம்பு, கொப்பு, குச்சு

10) சரியான நிறுத்தற்குறியிட்ட வாக்கியத்தை தேர்ந்தெடு.

a) வீரன்‌, அண்ணன்‌, மருதன்‌ – ஆண்‌ பால்‌
b) வீரன்‌ அண்ணன்‌ மருதன்‌ – ஆண்பால்‌
c) வீரன்‌ அண்ணன்‌ மருதன்‌ ஆண்பால்‌
d) ‘வீரன்‌’ அண்ணன்‌, மருதன்‌ – ஆண்பால்‌,