1) கீழ்க்கண்டவற்றில் சரியான இணைப்புச் சொல்லை எழுதுக.
பிறருக்குக் கொடுத்தலே செல்வத்தின் பயன்.
———— பிறருக்குக் கொடுத்து மகிழ்வோம்.
a) அது போல
b) எனவே
c) ஏனெனில்
d) மேலும்
2) சரியான இணைப்புச் சொல்லால் நிரப்புக.
அற இலக்கியங்கள் கூறும் கருத்துகளை வாழ்வில் பின்பற்ற வேண்டும். ———— அவை நம் வாழ்வை வளமாக்கும்.
a) ஆகவே
b) ஏனெனில்
c) எனவே
d) அதனால்
3) சரியான இணைப்புச் சொல் எது?
நேற்றிரவு நல்ல மழை பெய்தது. ஏரி குளங்கள் நீரம்பின.
a) அதனால்
b) ஆகையால்
c) எனவே
d) ஏனெனில்
4) சரியான இணைப்புச் சொல் தேர்க :
நாம் இனிய சொற்களைப் பேச வேண்டும் ————, துன்பப்பட நேரிடும்.
a) ஏனெனில்
b) அதனால்
c) இல்லையென்றால்
d) மேலும்
5) சரியான இணைப்புச் சொல் தருக
அலுவலகப் பணிகாரணமாக வெளியூர் சென்ற என் தந்தை ஊர் திரும்ப ———— இரண்டு நாட்கள் ஆகும் என்றார்.
a) மேலும்
b) அதனால்
c) இல்லையெனில்
d) ஏனெனில்
6) இணைப்புச் சொல் தருக.
செல்வத்தின் பயன் ஈதல் ———— பிறருக்குக் கொடுத்து மகிழ்வோம்
a) எனவே
b) இல்லைலயன்றால்
c) மேலும்
d) அதுபோல
7) சரியான இணைப்புச் சொல் அமைந்த வாக்கியத்தைக் கண்டறிக.
a) நேற்று கனமழை பொழிந்தது. எனெனில் ஏரி, குளங்கள் நிரம்பின.
b) நேற்று கனமழை பொழிந்தது. அதனால் எரி குளங்கள் நிரம்பின.
c) நேற்று கனமழை பொழிந்தது. அதுபோல எரி குளங்கள் நிரம்பின.
d) நேற்று கனமழை பொழிந்தது. இருந்தபோதிலும் ஏரி குளங்கள் நிரம்பின.
8) சரியான இணைப்புச் சொல்
காயிதே மில்லத் அவர்கள் மகிழுந்தில் பயணம் செய்வதை விரும்பாதவர். ———— அவர் எளிமையை விரும்பியவர்.
a) ஏனெனில்
b) அதனால்
c) ஆகையால்
d) அதுபோல
9) சரியான இணைப்புச் சொல்லினைத் தோ்ந்தெடு
பிறருக்கு கொடுத்தலே செல்வத்தின் பயன் ———— பிறருக்குக் கொடுத்து மகிழ்வோம்.
a) அதுபோல
b) மேலும்
c) ஏனெனில்
d) அதனால்
10) சரியான இணைப்புச்சொல்
தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. இரண்டு நாட்கள் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.
a) அதனால்
b) அதுபோல
c) எனவே
d) ஏனெனில்