கூற்று, காரணம்‌ – சரியா? தவறா? (PYQ)

1) சரியான கூற்றினைத்‌ தெரிவு செய்க.
I) “ஆ” என்பது எதிர்மறை இடைநிலை
II) வீட்டிற்கோர்‌ புத்தகசாலை என்பது அண்ணாவின்‌ வானொலி உரை.
III) வில்லுப்பாட்டு ஓர்‌ இலக்கிய வடிவம்‌

a) II, III சரி; I தவறு
b) I, III சரி; II தவறு
c) மூன்றும்‌ சரி
d) மூன்றும்‌ தவறு

2) கூற்று, காரணம்‌ – சரியா? தவறா?
கூற்று: உரிச்சொற்கள்‌ குறிப்பு, பண்பு எனும்‌ பொருள்களைத்‌ தருவதில்லை
காரணம்‌ : உரிச்சொற்கள்‌ தனித்து வழங்கப்படும்‌

a) கூற்று சரி ; காரணம்‌ சரி
b) கூற்று தவறு; காரணம்‌ சரி
c) கூற்று சரி; காரணம்‌ தவறு
d) கூற்று தவறு; காரணம்‌ தவறு

3) கூற்று, காரணம்‌ – சரியா ? தவறா?
கூற்று : ஓர்‌ ஆணைக்‌ குறிப்பது ஆண்பால்‌
காரணம்‌: உயர்திணைக்கு உரியவன்‌ ஆண்‌.

a) கூற்று தவறு; காரணம்‌ தவறு
b) கூற்று சரி; காரணம்‌ சரி
c) கூற்று சரி; காரணம்‌ தவறு
d) கூற்று தவறு; காரணம்‌ சரி

4) கூற்று காரணம்‌ – சரியா தவறா?
கூற்று 1 : பழந்தமிழர்கள்‌, மழைச்சோற்று நோன்பு இருந்து இறைவனை வழிபடுவர்‌.
கூற்று 2 : ஒவ்வொரு வீடாகச்‌ சென்று உப்பில்லாச்‌ சோற்றை ஒரு பானையில்‌ வாங்குவர்‌.
கூற்று 3 : ஊர்‌ பொது இடத்தில்‌ வைத்து அனைவரும்‌ பகிர்ந்து உண்பர்.
கூற்று 4 : மழையில்‌ நனைந்து கொண்டே உண்பர்‌.

a) கூற்று 1 தவறு, 2, 3, 4 சரி
b) கூற்று 1, 2, 3 சரி, 4 மட்டும்‌ தவறு
c) கூற்று 1, 2, 3, 4 சரி
d) கூற்று 1, 2 சரி, 3, 4 தவறு

5) கூற்று சரியா தவறா?
கூற்று 1: தெருக்கூத்தைத்‌ தமிழ்க்‌ கலையின்‌ முக்கிய அடையாளமாக்கியவர்‌ கூத்துப்பட்டறை ந.முத்துசாமி என்ற கலை ஞாயிறு
கூற்று 2 : கூத்துக்கலையின்‌ ஒப்பனை, கதை சொல்லும்‌ முறை ஆகியவற்றை எடுத்துக்‌காண்டு புதுவித நாடகங்களை உருவாக்கியவர்‌
கூற்று 3 : இந்திய அரசின்‌ தாமரைத்திரு விருதையும்‌ தமிழ்நாடு அரசின்‌ கலைமாமணி விருதையும்‌ பெற்றவர்‌

a) கூற்று 1, 2, 3 சரி
b) கூற்று 1 மட்டும்‌ சரி, 2, 3 தவறு
c) கூற்று 1, 2 சரி, 3 மட்டும்‌ தவறு
d) கூற்று 1, 3 சரி, 2 மட்டும்‌ தவறு

6) கூற்று – சரியா? தவறா?
1) தமிழகத்தின்‌ முதல்‌ பெண்‌ மருத்துவர்‌ டாக்டர்‌ முத்துலட்சுமி அம்மையார்‌.
2) 1952 இல்‌ அடையாறு புற்றுநோய்‌ மருத்துவமனையை நிறுவினார்‌.
3) சென்னை மாநகராட்சியின்‌ மேயராக இருந்தார்‌.

a) கூற்று 1, 2, 3 தவறு
b) கூற்று 1, 2 சரி 3 மட்டும்‌ தவறு
c) கூற்று 1, 2, 3 சரி
d) கூற்று 1 சரி, 2, 3 தவறு

7) கூற்று – சரியா? தவறா?
1) உலகிலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல்‌ நாடு மலேசியா.
2) மாநாட்டுக்குரிய மொழி தமிழ்‌.

a) கூற்று 1, 2 தவறு
b) கூற்று 1, 2 சரி
c) கூற்று 1 மட்டும்‌ சரி
d) கூற்று 2 மட்டும்‌ சரி

8) கூற்று : அயோத்திதாசர்‌ “ஒரு பைசா தமிழன்‌” என்ற வார இதழைத்‌ தொடங்கினார்‌.
காரணம்‌ (1): இவர்‌ தனது ஆசிரியர்‌ பெயரையே தம்‌ பெயராக வைத்துக்‌ கொண்டார்‌.
காரணம்‌ (2): ஒரு பைசா தமிழன்‌ என்ற வார இதழ்‌ 1 பைசாவிற்கு விற்கப்பட்டது.
காரணம்‌ (3): ஓர்‌ ஆண்டிற்குப்‌ பின்‌ இவ்விதழின்‌ பெயரைத்‌ தமிழன்‌ என மாற்றினார்‌.

a) கூற்றும்‌, காரணங்களும்‌ சரி
b) கூற்று சரி காரணம்‌ 1 தவறு 2, 3 சரி
c) கூற்று சரி காரணம்‌ 1, 2 சரி 3 மட்டும்‌ தவறு
d) கூற்றும்‌ காரணம்‌ 1, 3ம்‌ சரி 2 மட்டும்‌ தவறு

9) கூற்று : த்‌, ந்‌ – ஆகிய எழுத்துகள்‌ இன எழுத்துகள்‌ ஆகும்‌. இவற்றை ‘நட்பெழுத்துகள்‌’ எனவும்‌ கூறுவர்‌.
காரணம்‌ : த்‌, ந்‌ – இவ்விரண்டெழுத்தும்‌ நாவின்‌ நுனி மேல்வாய்ப்‌ பல்லின் அடிப்பகுதியைத் தொடுவதால் பிறக்கின்றன

a) கூற்று, காரணம்‌ – இரண்டும்‌ சரி
b) கூற்று சரி, காரணம்‌ தவறு
c) கூற்று தவறு, காணம் சரி
d) கூற்று, காரணம்‌ – இரண்டும்‌ தவறு

10) கூற்று 1 : நாட்டைக்கைப்பற்றல்‌ – மஞ்சள்‌ நிறம்‌ கொண்ட மலர்‌ – கொடி வகை
கூற்று 2 : நிரை மீட்டல்‌ – நீலம்‌ கலந்த சிவப்பு மலர்‌ – செடி வகை
கூற்று 3 : எதிர்த்து போரிடுவது – நீல நிறமலர்‌ – குறுமர வகை
கூற்று 4: கோட்டையை கைப்பற்றல்‌ – வெண்ணிறம்‌ – செடிவகை

a) கூற்று 1, 4 மட்டும்‌ சரி
b) கூற்று 2, 4 மட்டும்‌ சரி
c) கூற்று 1, 2 மட்டும்‌ சரி
d) கூற்று 3 மட்டும்‌ சரி